தீராத சோகத்திலும் முன்மாதிரியாக செயல்படும் இளைஞர்கள் !

0
1254
views

சென்னை திருவான்மியூரில் இருக்கும் ஆட்டோ நிலையம் தான் “ஆட்டோ ராஜா”. இங்கு பி.ஜெயக்குமார், பி.ரகுபதி, சந்தோஷ்குமார் மற்றும் பலர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். சமூக அக்கறை உள்ள இந்த இளைஞர்கள் ஆட்டோ ஓட்டினாலும் தங்கள் அனுபவம் மூலம் பல்வேறு நல்ல செயல்களை செய்து வருகின்றனர்.

பி.ஜெயக்குமார்:
இவர் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதினால் ஏற்படும் விளைவுகளை பற்றி பிரச்சாரம் செய்கிறார்.

காரணம்: இவரது அன்பு மகன்  வாகனத்தின் மீது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஒருவர் மோதியதால் இன்று நாற்காலியில் முடங்கிப் போயுள்ளான்.

பி.ரகுபதி:
இவர் தனது பயணிகளுக்கு திருக்குறளை அர்த்தத்துடன் எடுத்துக் கூறிவருவதுடன், அவர்களுக்கு இலவசமாக குடிநீரும் தருகிறார்.

காரணம்: இவர் ஊரில் விவசாயம் இல்லாமல் போய்விட்டது. சினிமாவில் லைட்மேன் ஆகவும், பிளம்பர் தொழில் செய்தும் கஷ்டப்பட்டுள்ளார். பயணிகளின் தாகத்தை தீர்த்து சமூக சேவை செய்வதை நிறைவாக கருதுகிறார்.

சந்தோஷ்குமார்:
இவரது லட்சியம் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே.

காரணம்: இவர் ஆட்டோ ஓட்டிய பணத்தில் தான் கல்லூரி படித்து வருகிறார்.

இந்த இளைஞர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் பிறருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று சமூக சேவை செய்கிறார்கள். இவர்களை போல ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு அனுபவம் இருக்கும். நமது அனுபவங்களை இவர்களை போல, நல்ல செயல்களாக மாற்றலாமே. இதனால் நம்மை போல பிறரும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.

எந்த வாகனத்திற்கும் முன்னாலும் அந்த சாமி துணை, இந்த சாமி துணை என்று எழுதியிருக்கும். இந்த இளைஞர்களோ இவர்களது ஆட்டோ முன்னால் “நல்ல மனிதர்களே துணை” என்று எழுதியுள்ளார்கள். இவர்களின் இந்த சமூக சேவை இவர்களுக்கு நல்ல மனிதர்களையே பெற்றுத் தரும்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here