ராகுல் கேரளாவை தேர்ந்தெடுத்ததற்கு இந்த 4 விஷயங்களே காரணம்

0
289
views

ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிட கீழ்கண்ட 4 விஷயங்களே காரணம்:

1. தென் மாநிலங்களில் குறைந்த பட்சம் 75 சீட் ஆவது வெல்ல வேண்டும் என்பது காங்கிரஸ் இலக்கு. மற்ற தென் மாநிலங்களை விட கேரளாவில் காங்கிரஸ் யாரையும் நம்பி இல்லை. எனவே இங்கு அதிகமாக வென்றால் அது ஆட்சியமைக்க உதவும்.
அது மட்டுமல்ல கேரளா வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் அது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இரு மாநில எல்லையிலும் குறிப்பாக, மைசூர், சாம்ராஜாநகர், நீலகிரி யில் காங்கிரஸ் ஆதரவு அலையை ஏற்படுத்தும்.

தென் மாநிலங்களில் மட்டும் மொத்தம் 129 சீட் உள்ளன. கேரளா (20), கர்நாடகா (28), தமிழ்நாடு (39), ஆந்திரா (25), தெலுங்கானா (17), புதுச்சேரி (1). காங்கிரசிற்கு தற்போது 19 சீட் மட்டுமே உள்ளது. அதாவது, கர்நாடகா (9), கேரளா (8), தெலுங்கானா (1), புதுச்சேரி (1). எனவே 75 சீட்டாவது வெல்ல ராகுல் வயநாடை தேர்வு செய்துள்ளார்.

2. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தெலுங்கானா காங்கிரஸ் MLA கள் 19 பேர், TRS கட்சியில் இணைந்து விட்டார்கள். தென் மாநில காங்கிரசாரை கட்டுக்குள் வைக்கவும், உற்சாகம் அளிக்கவும் ராகுல் வயநாடை தேர்வு செய்துள்ளார்.

3. சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உருவாகும் எதிர்ப்பு ஓட்டுகள் பிஜேபிக்கு போகாமல் இருக்கவும், அதை காங்கிரஸ் ஆதரவு ஓட்டாகவும் மாற்ற ராகுல் கேரளாவை தேர்வு செய்துள்ளார்.

4. தென் மாநிலங்களில் சமீபத்தில் நடந்த ராகுலின் நிகழ்ச்சிகளும், துபாயில் நடந்த ராகுல் நிகழ்ச்சியும் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றது. எனவே அதை அப்படியே ஓட்டாக மாற்ற ராகுல் முடிவு செய்துள்ளார்.

இந்த நான்கு காரணங்கள் தான் ராகுல் கேரளாவில் போட்டியிட மிக முக்கிய காரணம்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here