மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்

0
886
views

பெரியவர்கள் நமக்கு அறிவுரை சொல்லும் போது நாம் அதை நிராகரித்தால், மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்கனியும் முன்பு கசக்கும், பின்பு இனிக்கும் என்று பழமொழி சொல்வார்கள். அதற்கு அர்த்தம் என்ன என்பதை தான் பார்க்கப் போகிறோம்.

முழு நெல்லி கசக்கும் என்பதற்காக சாப்பிடாமல் இருந்தால், சாப்பிட்ட பின்பு கிடைக்கும் இனிப்புச் சுவையை உணர முடியுமா? முடியாதல்லவா..

அதே போல, பெரியவர்கள் நமக்கு அறிவுரை சொல்லும் போது, அதை கேட்பதும், கடைபிடிப்பதும் சிரமமாக இருக்கும். ஆனால் நாம் அதை கடைபிடித்த பின்பு கிடைக்கும் அனுகூலத்தை உணரும் போது, பெரியவர்கள் அறிவுரை எவ்வளவு இனிமையானது என்பதை உணருவோம்.

இந்த அர்த்தத்தில் தான், மூத்தோர் சொல்லும், முழு நெல்லிக்கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும் என்று சொல்வார்கள். பெரியவர்கள் தங்களது அனுபவத்தில் கூறும் அறிவுரைகளை பின்பற்ற முயற்சி செய்வோம்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here