ரஜினி மட்டுமல்ல கடம்பூர் ராஜுவையும் கேள்வியால் துளைத்தவர் சந்தோஷ்

0
1378
views

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற ரஜினிகாந்தை, சிகிச்சை பெற்றுவரும் சந்தோஷ் என்ற இளைஞர், “யாரு நீங்க?” என்று கேள்வி கேட்டது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. சந்தோஷுக்கு ஒரு பக்கம் ஆதரவும், இதையே ஒரு எம்.எல்.ஏ, எம்.பி யிடம் கேட்க முடியுமா என்று எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மக்களை சந்திக்க வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவை கேள்வி கேட்டு துளைத்தவர் இதே சந்தோஷ் தான்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ, சந்தோஷிடம் கவலை படாதீர்கள் எல்லாம் சரி ஆகிவிடும் என்று ஆறுதல் சொல்ல, துப்பாக்கிச் சூடு நடத்த ஸ்டெர்லைட் முதலாளியிடம் எவ்வளவு வாங்கினீர்கள்? அதை விட பணம் அதிகமாக நாங்கள் தருகிறோம். ஆலையை மூடுங்கள் என்றார். உடனே கடம்பூர் ராஜூ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சமாதனம் செய்ய முயன்றார். ஆலையை நிச்சயம் மூடுவோம் என்ற கடம்பூர் ராஜுவிடம், ஆலையை மூடுவோம் என்பதை எழுதிக் கொடுங்கள் என்று சந்தோஷ் கேட்டவுடன், பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் அங்கிருந்து செல்கிறார். இது அனைத்து மீடியாக்களிலும் வெளியானது.

ஆனால் சந்தோஷ் பற்றி முழுமையாக தெரியாதவர்கள் தான், ரஜினியை பார்த்து கேட்ட கேள்வியை எம்.எல்.ஏ எம்.பி யிடம் கேட்க முடியுமா என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். உண்மையில் சந்தோஷ் என்ற இளைஞர் ரஜினியை விட அமைச்சரை தான் கேள்விகளால் துளைத்துள்ளார் என்பதே எதார்த்த உண்மை.

ஓட்டுப் போடுவது மட்டுமல்ல, அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க இளைஞர்கள் பழக வேண்டும் என்பதற்கு சந்தோஷ் ஓர் உதாரணம்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here