ஜம்முவில் கலவரம் செய்யும் காவிகள் | வீரர்களின் மரணத்தை சுயலாபத்திற்கு பயன்படுத்தும் கேவலம்

1
671
views

புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதலில் 45 ராணுவ வீரர்கள் பலியாகினர். உளவுத் துறை எச்சரித்தும் மத்திய அரசு அலட்சியப்படுத்தியதால், இந்த துயரச் சம்பவம் அரேங்கேறியது.

இதற்கு பாகிஸ்தான் விலை கொடுக்கும் என்றார் பிரதமர் மோடி. ஆனால் பாகிஸ்தான் மீதோ, தீவிரவாத அமைப்பின் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஜம்முவில் வசித்து வரும் அப்பாவி முஸ்லிம்களின் சொத்துக்களை சேதப்படுத்தி கலவரம் செய்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷத்தை எழுப்பியவாரே முஸ்லிம் வீடு, கடை, கார்கள், இரு சக்கர வாகனங்களாக பார்த்து அடித்து நொறுக்கி வருகிறார்கள் காவிகள்.

ஜம்முவில் உள்ள காவல்துறை எச்சரித்தும், ஜுவல் சவுக், புராணி முண்டி, குஜ்ஜார் நகர் போன்ற பல பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் காவிகள்.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் பாஜக படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி 157 இடங்களும், பாஜக விற்கு 100 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் ஆளும் கட்சியாக இருந்த மெகபூபாவின் PDP கட்சியும், எதிர்கட்சியான உமர் அப்துல்லா வின் NC கட்சியும் இந்த தேர்தலை புறக்கணித்தனர். அதனால் தான் பாஜக விற்கு இந்த 100 இடமும் கிடைத்தது.

2014 ஆம் ஆண்டு நடந்த லடாக் மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இந்த தொகுதியில் உள்ளாட்சி வார்டுகளில் பாஜக மரண அடி வாங்கியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தோல்வி, வருகிற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், ராணுவ வீரர்களின் உயிரிழப்பை காரணம் காட்டி கலவரம் செய்து மத ரீதியாக பிரிவினை செய்து, அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கணக்கு போட்டுள்ளது பாஜக.

நாடு முழுவதும் ராணுவ வீரர்களின் உயிரிழப்பால் எல்லோரும் சோகமடைந்துள்ள நிலையில், ராணுவ வீரர்களின் உடலை வைத்து கலவர அரசியல் செய்கிறது மோடி அரசு.

1 COMMENT

 1. காவிகளுக்கு மதக்கலவரங்ளை தவிர வேறு யுக்தி தெரியாது!

  அரசியல் லாபத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்,

  காஷ்மீர் ப்ரச்சினையை வெறும் இந்து-முஸ்லீம் ப்ரச்சினையாக மட்டும் அணுக கூடாது,

  சுதந்திரம்பெற்ற காலங்களில் காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் விருப்பப்பட்டு இணைந்தவர்கள், அந்நாளில் அங்கு மத ரீதியான எந்த ப்ரச்னைகளும் இல்லை,

  இடையில் ேதான்றிய அரசியல் ரீதியான ப்ரச்னைகள் காரணமாக மத ரீதியான மே ாதல்கள் தூண்டி விடப்பட்டன,

  அரசியல் ஆதாயத்திற்கு இவை நல்ல தீனியாக அமைந்துவிட்டதால், மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும், காஷ்மீர் ப்ரச்சினையை கண்டு கெ ாள்வதில்லை,

  தேர்தல் சமயங்களில் மட்டும் இந்த ப்ரச்சினை வெடிக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here