ராகுல் குறித்து போலிச் செய்தி பரப்பி மாட்டிகொண்ட தினமலர்

0
1328
views

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை 14 வயது சிறுமி ஒருவர் மிரள வைக்கும் விதமாக கேள்வி கேட்டதாகவும், ராகுல் காந்தி பதில் அளிக்க முடியாமல் நேரலையை துண்டித்து விட்டதாகவும் தினமலர், தினகரன் உள்ளிட்ட தமிழ் நாளிதழ்களும், போஸ்ட்கார்டு, மைநேசன் போன்ற ஆங்கில சேனல்களும் செய்தியை வெளியிட்டன.

ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக துபாய் நாட்டிற்கு சென்று அங்குள்ள இந்தியர்களை சந்தித்து உரையாடி வருகிறார். துபாய் கிரிக்கெட் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் ராகுல் காந்தி பேசினார். அந்த நிகழ்ச்சியில் 14 வயது சிறுமி ஒருவர், “இந்தியாவில் மதவாதம் அதிகரித்து விட்டதாக கூறும் நீங்கள் ஏன் குஜராத் தேர்தலின் போது திருநீறு இட்டு கோயிலுக்குள் சென்றீர்கள் என்றும், காஷ்மீருக்கு சென்ற போது குல்லா ஏன் அணிந்தீர்கள் என்றும் அந்த சிறுமி கேட்டவுடன், அனைத்து மதத்தினரும் சமம் என்பதை உணர்த்தவே எல்லா வழிபாட்டு தலங்களுக்கும் சென்றேன். சமத்துவ இந்தியாவை உருவாக்குவதே நோக்கம் என்று ராகுல் காந்தி பதில் அளித்ததாகவும்,

உடனே அந்த சிறுமி, இந்தியாவில் 80% ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. அப்போது செய்யாத நீங்கள் இப்போது மட்டும் எப்படி நன்மை செய்வீர்கள் என்று கேட்டதாகவும், மோடி ஆட்சிக்கு வந்த பின்பு தான் வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு மதிப்பு கிடைத்தாகவும் கூறினார் என்றும், நீங்கள் மதவாதம் என்று பிரச்சாரம் செய்யாமல், ஊழல் இல்லா இந்தியா என்று பிரச்சாரம் செய்தால் நாட்டு மக்கள் சிந்திப்பார்கள் என்றும் அந்த சிறுமி கேள்வி கேட்டதாகவும் அதற்கு ராகுல் பதில் அளிக்க முடியாமல் நின்றவுடன் அந்த நிகழ்ச்சியின் நேரலை நின்று விட்டதாகவும் செய்தியை தினமலர், தினகரன், தமிழ் 24 போன்ற தமிழ் ஊடகங்களும், மைநேசன், போஸ்ட்கார்ட் போன்ற ஆங்கில சேனல்களும் செய்தி வெளியிட்டன.

தினமலர் வெளியிட்ட போலிச் செய்தி:
https://www.dinamalar.com/news_detail.asp?id=2191399

தினகரன் வெளியிட்ட போலிச் செய்தி:
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=465906

மேற்கண்ட இந்த தினமலர், தினகரன் பத்திரிகைகள் கோப்ராபோஸ்ட் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில், காசு வாங்கி மோடிக்கு ஆதரவாக செய்தி வெளியிட ஒப்புக்கொண்ட காட்சிகளை குட்நியூஸ் தமிழ் வெளியிட்டது.

கோப்ராபோஸ்ட் செய்தி:
http://goodnewstamil.com/paid-media-tamil-exposed/

மைநேசன், போஸ்ட்கார்ட் மற்றும் தமிழ்24 போன்ற சேனல்கள் நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க விற்கு ஆதரவாக பல போலிச் செய்திகளை பரப்பியவர்கள் ஆவர். இந்த பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தி உண்மையா என்று ஆராயாமல் சொல்லி வைத்தார் போல பல ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் அதை சமூக வலைதளங்களில் பரப்பி அகமகிழ்ந்தனர். ஆர்.பி.ஐ டிரெக்டராக இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி கூட இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

உண்மை என்ன என்று நாம் ஆராய்ந்ததில் ராகுல் காந்தியின் எந்த நிகழ்ச்சியிலும் அந்த சிறுமி கலந்து கொள்ளவே இல்லை என்று தெரிய வந்தது. அந்த சிறுமியின் புகைப்படம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, KidsandShare என்ற யூடுயுப் சேனலில் பாலின பாகுபாடு குறித்து பேசியுள்ளதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து போலிச்செய்தியை பரப்பியுள்ளனர்.

அந்த சிறுமியின் புகைப்படத்தை google reverse image மூலம் ஆராய்ந்த போது, அது ஒரு யூடுயுப் வீடியோவை காட்டியது. Save Girl Child Powerful speech by siddhi bagwe என்ற தலைப்பில் உள்ளது அந்த யூடுயுப் வீடியோ. அந்த வீடியோவிற்கு கீழே உள்ள description யை நாம் பார்த்த போது, அது மும்பை விக்ரோலியில் உள்ள சென்ட் ஜோசப் மேல்நிலை பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் தெரிய வந்தது.

நடந்தது என்ன?

துபாய் சென்ற ராகுல் காந்தி, கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியிலும், பின்பு பல்கலைக் கழக மாணவர்களிடையே நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியிலும், தொழிலாளர்கள் மத்தியில் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பேசியுள்ளார். கிரிக்கெட் மைதானத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, மக்களிடமிருந்து எந்த கேள்வியையும் கேட்கச் சொல்லவில்லை.

பல்கலைக் கழக மாணவர்களிடையே நடந்த இன்னொரு நிகழ்ச்சியில் முதலிலேயே மாணவர்களிடம் இருந்து கேள்விகளை வாங்கிக் கொண்ட பின்பு தான், அவர்களிடம் அது குறித்து உரையாற்றியுள்ளார். தொழிலாளர்கள் மத்தியில் பேசிய ராகுல், அம்மக்கள் சந்திக்கும் குறைகளை மட்டுமே கேட்டுள்ளார். அங்கும் அவரிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை.

கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்களிடம் பேசிய ராகுல் காந்தியின் முழு நேரலையும் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் உள்ளது. அந்த வீடியோவை ஆய்வு செய்த போது, அதில் எந்த இடத்திலும் எந்த தடங்களும் இல்லை. மாறாக இவர்கள் செய்தி வெளியிட்டதைப் போல எந்த சிறுமியும் அங்கு கேள்வி எழுப்பவில்லை.

கிரிக்கெட் மைதான நிகழ்ச்சியின் இறுதியில், ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் மட்டும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறினார் ராகுல்.

எனவே இந்த மூன்று நிகழ்ச்சியிலும் அந்த சிறுமி கேட்டதாக சொல்லப்படும் சம்பவம் நடைபெறவே இல்லை. ராகுல் காந்தியின் முழு பயணத்தையும் தொகுத்த பத்திரிக்கையாளர்கள் எல்விஸ் ஜும்மர் மற்றும் ராஜு மேத்யூ ஆகியோரிடம் இது போன்ற சம்பவம் நடைபெற்றதா என்று கேட்ட போது, இது 100% போலிச் செய்தி என்று மறுத்தனர்.

3 மாநில தேர்தல் வெற்றிக்கு பிறகு ராகுல் காந்திக்கு துபாய் நாட்டில் கிடைத்த எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மற்றும் இந்துத்துவா சிந்தனையாளர்கள் தங்களின் பத்திரிக்கைகள் மூலம் போலிச் செய்தியை பரப்பி தரங்கெட்ட அரசியலை செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த செய்தியாக இருந்தாலும் அதில் உண்மைத்தன்மை என்ன என்று ஆய்வு செய்து பரப்ப வேண்டும். அதிலும் குறிப்பாக பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பரப்பும் செய்திகளில் 99.99% உண்மையே இருக்காது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

போலிச் செய்தியை வெளியிட்ட தினமலர் மற்றும் தினகரன் உள்ளிட்ட தமிழ் நாளிதழ்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்குமா?F

Follow Good News Tamil Facebook:
https://www.facebook.com/goodnews.emagazine/

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here