ஆசிய கோப்பை அட்டவணை இந்திய அணிக்கு சாதகமாக உள்ளது – எதிரணி கேப்டன்கள் குற்றச்சாட்டு

1
337
views

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக அட்டவணை அமைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அணி கேப்டன் சப்ராஸ் அஹமது மற்றும் வங்கதேச அணி கேப்டன் மொர்டாசா குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட அணிகள் மோதின.

இந்த தொடரில், நடப்பு சாம்பியனான இந்திய அணி எல்லாப் போட்டிகளிலும் வெற்றிப் பெற்று வருகிறது. லீக் சுற்றில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் செய்தியாளர்களை சந்தித்த போது, போட்டி அட்டவணை இந்தியாவிற்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இந்திய அணி விளையாடும் எல்லா போட்டியும் துபாயில் நடைபெறுகிறது. ஆனால் மற்ற அணிகள் அனைத்திற்கும் துபாய் மற்றும் அபுதாபி என்று மாறி மாறி அட்டவணை உள்ளது. இதனால் கால நேரம் மற்றும் பருவ நிலை போன்றவை எங்களுக்கு பாதகமாக உள்ளது. ஆனால் இந்திய அணிக்கு இந்த பிரச்சனை இல்லை என்றார்.

இதே குற்றசாட்டை வங்கதேச அணி கேப்டன் மொர்டாசாவும் முன் வைத்தார். கிரிக்கெட் உலகில் ஜாம்பாவானாக இருக்கும் பி.சி.சி.ஐ தனது அதிகாரத்தை வைத்து, விளையாட்டின் கண்ணியத்தை குறைப்பதாக கூறியுள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here