இந்திய குழந்தைகளிடம் மத பாகுபாடு இல்லை – அமெரிக்க ஆய்வில் தகவல்

0
1206
views

இந்தியாவில் இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம், சீக்கியம், பவுத்தம் என பல மதங்கள் இருந்தாலும், குழந்தைகளிடம் எந்த வித மத வேறுபாடு பார்க்கும் எண்ணமில்லை என்று அமெரிக்கா நாட்டின், கலிபோர்னியாவில் உள்ள சான்ட் க்ரூஸ் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகில் பல்வேறு நாடுகள் இருந்தாலும், இந்தியாவில் மட்டும் தான் நிறைய மதங்கள் இருக்கின்றன. ஆனாலும் இந்த மக்கள் எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்ய பிற நாடுகள் ஆர்வம் கொள்கின்றன. அந்த வகையில் சான்ட் க்ரூஸ் என்ற பல்கலைக் கழகம் இந்திய குழந்தைகளிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

சமீப காலமாக இந்தியாவில் அதிகமான மதக் கலவரங்கள் நடந்து வரும் சூழலில், குழந்தைகளிடம் அந்த எண்ணம் இருக்கிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவை வெளியிட்ட பல்கலைக் கழகம், இந்திய குழந்தைகள் தங்கள் சார்ந்த மதத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தாலும், அவர்களிடம் மத வேற்றுமை உணர்வோ அல்லது பாகுபாடு பார்க்கும் எண்ணமோ இல்லை என்றும், வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போதே சாதி மற்றும் மத உணர்வு அதிகரித்து விடுவதாகவும் கூறியுள்ளது.

இந்த குழந்தைகளிடம் மத வெறுப்புணர்வை புகுத்தாத வரை, அவர்கள் எதிர்காலத்திலும் இதே சிந்தனையோடு வளர்வார்கள் என்றும், மத கலவரமே எதிர்காலத்தில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே இந்தியாவில் தான் தற்போது மதக் கலவரங்கள் அதிகம் நடப்பதாகவும், ஆனால் குழந்தைகளிடம் தெளிவான சிந்தனை இருப்பது தங்களை ஆச்சரியப்படுத்தியதாகவும் ஆய்வை நடத்தியவர்கள் கூறியுள்ளனர்.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு சமூக நீதி கதைகளையும், ஒற்றுமை குறித்த எண்ணம் ஏற்படும் கதைகளையும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சொல்லி வருவதன் மூலம், மத வெறியற்ற சமூகத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்த முடியும். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கதைகளை எடுத்துக் கூறி ஆக்கப்பூர்வமான சமூகத்தை கட்டமைக்க முன் வர வேண்டும்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here