நிதி வசூல் செய்து இந்துக்களுக்கு கோயில் கட்டிகொடுத்த முஸ்லிம்கள்

0
2735
views

பீகார் மாநிலம் காயா பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள். இங்குள்ள இந்து மக்களுக்கு கோவில் இல்லை என்பதால், அனைத்து இஸ்லாமியர்களும் நிதி திரட்டியும், இடம் தந்தும் கோயில் கட்டிக் கொடுத்திருப்பது மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருப்பது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் முஹம்மது அசாருதீன் கூறும் போது,

எங்கள் ஊரில் வசித்து வரும் இந்துக்கள், வழிபடுவதற்கு ஒரு கோவில் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனால் நாங்கள் அனைவரும் சேர்ந்தே ஒரு கோவில் கட்ட முடிவு செய்தோம். இந்த பகுதியில் கோவில் கட்ட எல்லோருமே சம்மதித்தனர். ஒரு வருடத்திற்கு முன்பு ஆரம்பித்து தற்போது இங்கு கோவில் கட்டி முடித்துள்ளோம் என்றார்.

இங்குள்ள இந்துக்கள், ஒரு கல்லின் மீது கடவுளின் பெயர் எழுதி அதை கோவிலாக வணங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவிற்கு பணம் சேகரித்து, 3 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டியுள்ளனர். ஒருவர் பணம் தந்ததோடு மட்டுமல்லாமல், தனது நிலத்தையும் கோவில் கட்ட கொடுத்துள்ளார்.

தனது சொந்த நிலத்தை கோவிலுக்கு தந்த முஹம்மது மன்சூர் என்பவரிடம் இது குறித்து கேட்ட போது,

இங்கு கோவில் கட்டுவதற்கான தேவை இருந்தது. அதனால் என் நிலத்தைக் கொடுத்தேன். மனம் இருந்தால் போதும். நாங்கள் அனைவரும் இங்கு ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம் என்றார் சர்வ சாதரணமாக.

தங்களுக்கு கோவில் கட்டிக் கொடுத்த முஸ்லிம் சகோதரர்களின் உதவியை என்றுமே மறக்க மாட்டோம் என்கிறார்கள் அங்குள்ள இந்துக்கள்.

இது மட்டுமல்ல, காயா பகுதியில் இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்தே அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் மதத்தின் பெயராலும், மாட்டின் பெயராலும் மனிதனை அடித்துக் கொன்று வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் தான் ஒவ்வொருவரின் மனதிலும் வேற்றுமையில் ஒற்றுமையை தூக்கி நிறுத்துகின்றன.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here