ஓடும் ஆறும், அணையும் | தன்னம்பிக்கை கதை

0
247
views

மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்பதற்காகத் தான் காடு, மேடு, கல் என அனைத்து தடைகளையும் தாண்டி உருண்டோடி வருகிறது ஆறு. அப்படி சீறி பாய்ந்து மக்களுக்கு பயனளிக்க நினைக்கும் ஆற்றை அணை கட்டி முடக்குகிறார்கள் மனிதர்கள். அது முடங்கி நின்றாலும் மீன்களின் வாழ்விற்கு பயனளிக்கும்.

ஆற்றை முடக்கி விட்டோம் என மனிதன் ஆணவம் கொண்டால், அது அடங்கி விடாது. மக்களுக்கு பயனளிக்க வேண்டும் என்ற குணத்தையும் மாற்றிக் கொள்ளாது. அணையை கட்டிய பென்னி குக் போன்ற மகான்களுக்காகவே பொறுத்திருக்கும். அதையும் மீறி முடக்க நினைத்தால், அது தன் கொள்ளளவை பெருக்கி கொண்டு, அணையை தாண்ட முயற்சிக்கும். முடக்க நினைத்த மனிதர்களையே திறக்க வைத்து முன்பை விட சீறி பாய்ந்து மக்களுக்கு குடிநீராகவும், விவசாயத்திற்கும் தன்னை அர்பணித்துக் கொள்ளும்.

ஆறு நினைத்தால் அணையிலேயே முடங்கி குளமாக மாறியிருக்க முடியும். ஆனால் அது முடக்கப்பட்டாலும் சீறி பாயவே நினைக்கும். அதுபோல தான் நாமும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனை வந்தாலும், உங்கள் கனவுகள் முடக்கப்பட்டாலும் கவலை படாதீர்கள். முடக்கப்பட்ட காலத்தில் ஆறு மீன்களுக்கு நன்மையளித்ததை போல ஏதேனும் நன்மை உங்களுக்கு இருக்கும். அதற்காக பிரச்சனை வந்து விட்டது இனி நம் கனவு நிறைவேறாது என முடங்கி விடாதீர்கள். ஆறு தன் கொள்ளளவை பெருக்கி கொள்வதைப் போல, பிரச்சனை வந்து முடங்கும் காலங்களில் உங்கள் திறமைகளை பெருக்கி கொள்ளுங்கள். உங்கள் திறமையும், நம்பிக்கையும் பெருகப் பெருக அணையே நினைத்தாலும் உங்களை தடுக்க முடியாது. பிரச்சனையை உடைத்துக் கொண்டு உங்கள் கனவை நோக்கி பாய, அப்பிரச்சனையே வழி ஏற்படுத்தும்.

ஆக, நீங்கள் முடக்கப்பட்டாலும், பிரச்சனை ஏற்பட்டாலும் இது தான் நம் வாழ்க்கை என ஒரு போதும் எண்ணி விடாதீர்கள். ஒரு போதும் உங்கள் மதிப்பைக் குறைத்து குளமாக மாறாதீர்கள். ஓடும் ஆறாகவே இருங்கள். உங்கள் கனவு நிறைவேறும்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here