ரஷ்யா போனால் என்ன ரபேல் இருக்கு; விசுவாசம் காட்டுகிறாரா மோடி

0
543
views

2016 ஆம் ஆண்டு இந்திய அரசு பிரான்ஸ் அரசுடன் ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது. இதில் இந்திய அரசு சார்பில் அனில் அம்பானியின் Reliance Defence நிறுவனம் பரிந்துரைக்கப்பட்டது என்றும், அம்பானியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள டசால்ட் நிறுவனத்திற்கு விருப்பம் இல்லை எனவும் சமீபத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலாண்டே பேட்டி கொடுத்தார்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த ரபேல் ஊழல் நடைபெறுவதற்கு முன்னரே, அனில் அம்பானி ரஷ்ய நாட்டுடன் ஒப்பந்தம் போட முயற்சி செய்துள்ளார். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.

இந்தியாவின் ராணுவ தயாரிப்புகளில் ரஷ்யா தான் நீண்ட கால நண்பனாக இருந்து வருகிறது. ரபேல் ஒப்பந்தம் கிடைப்பதற்கு முன்னரே ரஷ்யாவுடன் 3 முக்கிய ஒப்பந்தங்களை கையெழுத்திட முயற்சித்துள்ளார் அனில் அம்பானி. அனில் அம்பானியை ரஷ்யாவிற்கு அழைத்து சென்றவர் பிரதமர் மோடி.

கடந்த 2015 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், அரசு முறை பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ விற்கு சென்றார் பிரதமர் மோடி. அப்போது அவருடன் அனில் அம்பானியும் உடன் சென்றுள்ளார்.

Kamov KA – 226 Light ஹெலிகாப்டர்களை ராணுவத்திற்கு தயாரித்து இந்தியாவிற்கு வழங்க இருந்தது ரஷ்யா. 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை தனது Reliance Defence நிறுவனத்திற்கு எப்படியாவது பெற்றிட வேண்டும் என்று மோடியுடன் சென்றுள்ளார் அம்பானி.

ஆனால் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய விருப்பமில்லை என்று அனில் அம்பானியுடன் கோரிக்கையை நிராகரித்தது ரஷ்யா.

தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய முடியாது. அப்படியே ஒப்பந்தம் செய்ய வேண்டுமானால் அரசின் அங்கீகாரத்தை பெற்ற நிறுவனத்திடம் மட்டுமே ஒப்பந்தம் செய்வோம் என அறிவித்தது ரஷ்யா.

அப்போது அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசு பரிந்துரை செய்யவில்லை. எனவே ஹெலிகாப்டர் தயாரிக்கும் ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுவனமான HAL க்கு கொடுத்தது ரஷ்யா. இது போன்று தவறு மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதற்கு தான், பிரான்ஸ் நாட்டு ஒப்பந்தத்தில் அரசு நிறுவனத்தை விட்டுவிட்டு, அனில் அம்பானியின் நிறுவனத்தை பரிந்துரை செய்துள்ளது மோடி அரசு.

ஹெலிகாப்டர் போனால் என்ன போர்க்கப்பல் தயாரித்து தருகிறோம் என்று ரஷ்யாவின் United Shipbuilding Corporation (USC) எனப்படும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட முயற்சித்தார் அம்பானி. ஏற்கனவே இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டு போர்க்கப்பலுக்கு தேவையான இஞ்ஜின்களை தயாரித்து வரும் உக்ரைன் நாட்டு நிறுவனத்திடம், அனில் அம்பானியையும் சேர்த்துக் கொள்ளலாம் என ரஷ்யாவின் USC முடிவு செய்தது. ஆனால் கடைசியில் Goa Shipyard ltd என்ற நிறுவனம் அந்த ஒப்பந்தத்தை பெற்றது.

இருந்தாலும் அனில் அம்பானியுடன் USC போடவிருக்கும் ஒப்பந்தம், ரஷ்ய அதிபர் புதின் அவர்கள் அக்டோபர் மாதம் இந்தியா வரும் போது கையெழுத்தாகலாம் என சொல்லப்படுகிறது.

அனில் அம்பானியின் Reliance Communications நிறுவனத்தை, அவரது சொந்த தம்பியான முகேஷ் அம்பானியின் Jio நிறுவனம் தோற்கடித்த பின்பு நொடிந்து போய் இருந்த அனில் அம்பானிக்கு, ரஷ்யாவின் ஒப்பந்தம் கைகொடுக்க வில்லை என்றவுடன், பிரான்ஸ் நாட்டின் ரபேல் விமான ஒப்பந்தத்தை அவருக்கு பெற்றுத் தந்து விசுவாசம் காட்டுகிறாரா மோடி என எதிர் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அனில் அம்பானிக்கு சொந்தமான Reliance Defence நிறுவனம், ராணுவம் தொடர்பான கருவிகளுக்கு பயன்படும் ஒரு நட்டு-போல்ட் கூட தயாரித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here