4 ஆண்டுகளில் 35 ஏர்போர்ட் கட்டியதாக பொய் சொன்ன மோடி | உண்மை நிலவரம் என்ன?

0
2165
views
modi's twit about sikkim airport

சிக்கிம் தலைநகர் காங்டாக்கிலிருந்து 28 கி.மீ தொலைவில் இருக்கும் கிழக்கு சிக்கிம் மாவட்டத்தில் கட்டப்பட்ட பாக்யாங் விமானநிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி அவர்கள், தனது ஆட்சி காலத்தில் 35 விமான நிலையங்கள் கட்டப்பட்டதாக கூறினார். ஆனால் உண்மை நிலவரம் வேறு விதமாக உள்ளது.

மோடியின் திறப்பு விழா பேச்சு:

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் இது. நாட்டின் 100 வது விமான நிலையம். எனது ஆட்சியில் கட்டப்பட்ட 35 வது விமான நிலையம். இந்த நாளில் விமான நிலையம் திறக்கப்படுவதில் மகிழ்ச்சி. சிக்கிம் மாநிலத்திற்கு வாருங்கள். இந்த மாநிலத்தின் அழகை ரசியுங்கள் என்று ட்விட் செய்தார் மோடி.

திறப்பு விழாவில் உரையாற்றிய மோடி,

நாட்டில் மொத்தம் 100 விமான நிலையங்கள் உள்ளன. அதில் 35 விமான நிலையங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் கட்டப்பட்டது என்றார். மேலும், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 2014 ஆண்டு வரை மொத்தம் 67 ஆண்டுகளில் 65 விமான நிலையங்களே கட்டப்பட்டுள்ளன. வருடத்திற்கு 1 என்ற விகிதத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. ஆனால் எனது ஆட்சி காலத்தில் வருடத்திற்கு 9 விமான நிலையங்கள் வீதம் மொத்தம் 35 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன என்றார்.

சிக்கிம் ஏர்போர்ட் காங்கிரஸ் திட்டம்:

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையமான பாக்யாங் ஏர்போர்ட் காங்கிரஸ் ஆட்சியில் 2008 ஆம் ஆண்டு அறிவித்த திட்டமாகும். காலநிலை மாற்றம், கோர்கா ஜன்முகி மோர்ச்சா கட்சி மேற்கொண்ட தொடர்ச்சியான வேலை நிறுத்தம், பந்த் போன்றவற்றால் 50 மாதங்கள் தள்ளிப்போனது இந்த திட்டம். 2011 ஆம் ஆண்டு வந்த நிலநடுக்கமும் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் தள்ளிப்போக வைத்தது.

பின்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், ஜூலை 2014  ஆம் ஆண்டிற்குள் 83% பணிகள் முடிக்கப்பட்டது. அதாவது மோடி அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே 83% பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. தற்போது மீதமுள்ள சிற்சில பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது இந்த ஏர்போர்ட்.

நாட்டின் 100 ஏர்போர்ட் தான் உள்ளதா?

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் AAI எனப்படும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்ற அமைப்பு தான் கவனித்து வருகிறது.

2017-18 ஆம் ஆண்டின் கணக்கின் படி, AAI கட்டுப்பாட்டில் 129 விமான நிலையங்கள் இருப்பதாக அறிக்கையில் உள்ளது. அதில் 28 சர்வதேச விமான நிலையங்கள், 78 உள்நாட்டு விமான நிலையங்கள், 8 கஸ்டம்ஸ், 20 ராணுவ விமான நிலையங்கள் உள்ளது.

AAI Report

ஜூலை 19, 2018 முதல் ஆகஸ்ட் 8, 2018 கணக்கின்படி, மொத்தமுள்ள 129 விமான நிலையங்களில் 101 விமான நிலையங்கள் பயன்பாட்டிலும், 28 விமான நிலையங்கள் பயன்பாட்டில் இல்லை என்றும் அறிக்கையில் உள்ளது.

மோடி ஆட்சியில் கட்டப்பட்டது எத்தனை?

2014 ஆம் ஆண்டின் கணக்கின் படி, அதாவது மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை AAI கட்டுப்பாட்டில் 125 விமான நிலையங்கள் இருந்துள்ளன. டிசம்பர் 1, 2014 ஆம் ஆண்டின் கணக்கின் படி, 94 விமான நிலையங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. 31 விமான நிலையங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது.

இதிலிருந்தே மோடியின் ஆட்சியில் அவர் சொல்வதைப் போல, 35 விமான நிலையங்கள் கட்டப்படவில்லை என்பதை அறிய முடிகிறது. மொத்தமே நான்கு விமான நிலையங்கள் தான் மோடியின் ஆட்சியில் அதிகரித்துள்ளது.

ஆட்சிக்கு வந்த பின்பு, 94 லிருந்து 101 விமான நிலையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ஆனால் ஏற்கனவே இருந்து பயன்பாட்டில் இல்லாமல் இருந்த விமான நிலையங்கள் 31 லிருந்து 28 ஆக குறைந்துள்ளது. இதனை வைத்து பார்க்கும் போது நான்கு விமான நிலையங்கள் மட்டுமே மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது உறுதியாகிறது. இந்த நான்கு விமான நிலையங்களில் பெரும்பாலானவை காங்கிரஸ் ஆட்சியில் துவங்கப்பட்டது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். காங்கிரஸ் திட்டங்களை எல்லாம் தங்களது திட்டமாக சொல்வதில் நியாயமில்லை என்றும் கூறுகிறார்கள்.

நாட்டில் எத்தனை விமானங்கள் இருக்கிறது என்பது கூட தெரியாமலும், நான்கு ஆண்டுகளில் 35 விமான நிலையங்கள் கட்டப்பட்டது என்று தவறான தகவலையும் ஒரு நாட்டின் பிரதமரே சொல்வது தான் துரதிஷ்டவசமானது.

Also Read this:

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here