இறந்து 2 நாட்கள் ஆகியும் 10 பைசா கூட அறிவிக்காத மோடி | கூட்டணியில் மும்முரம்

0
336
views

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் CRPF வீரர்கள் மீது நடந்த தாக்குதலில் 45 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இறந்த ராணுவ வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டு இறுதிச் சடங்கும் முடிந்த நிலையில், இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக 10 பைசாவை கூட மத்திய பாஜக அரசு ஒதுக்க வில்லை. ஆனால் ராணுவ வீரர்களை காட்டி எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று தமிழிசையும், மத்தியில் ரத யாத்திரை தொடங்கி என்று ராஜ்நாத் சிங்கும் அரசியல் செய்து வருகின்றனர்.

ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடந்தவுடன் நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்தன. ஆனால் பிரதமர் மோடி அரசு விழாவில் பங்கு கொண்டு பிரச்சாரம் செய்தார். மேலும் வீரர்கள் இறந்த செய்தி கிடைத்தும் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வந்தார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் கூட்டணி பேச்சில் ஈடுபட்டனர்.

இறந்த ராணுவ வீரர்களுக்காக மத்திய பிரதேசம் 1 கோடியும், ராஜஸ்தான், உ.பி 25 லட்சமும், தமிழ்நாடு 20 லட்சமும், பஞ்சாப் 12 லட்சமும் அறிவித்தன. ஆனால் ராணுவ வீரர்கள் இறந்த பின்பு பல மேடைகளில் பேசி வரும் மோடி, 10 பைசா கூட அறிவிக்கவில்லை. பாகிஸ்தானை காட்டி அரசியல் மட்டுமே பேசி வருகிறார்.

ஒரு வீரருக்கு 1 கோடி ஒதுக்கினாலும், 45 கோடி தான் வரும். ஆனால் ராணுவ வீரர்களுக்கு நிதி வழங்குங்கள் என்று மக்களை கேட்கிறார் மோடி.

ராணுவ வீரர்களுக்கு இழப்பீடு வழங்காமல், அவர்களின் இறப்பை காட்டி அரசியலும், கலவரமும் செய்து வருகிறது பாஜக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here