மாணவர்களை கூட விடமாட்டீர்களா மோடி?

0
269
views

75 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு என்.சி.சி சார்பாக அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

என்.சி.சி மாணவர்களை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட மோடி, அவர்களுக்கு ஊக்கப்படுத்தும் செய்திகளை கூறாமல் அங்கும் தனது தேர்தல் பிரசாரத்தை செய்தது சர்ச்சையாகியுள்ளது.

மாணவர்களிடம் பேசிய மோடி, என்.சி.சி குறித்த செய்திகளை பகிர்ந்து கொண்டதை விட, தனது அரசின் சாதனைகள் பற்றியும், கடந்த ஆட்சிகளை பற்றியும் குறை கூறி தனக்காக வாக்களிக்குமாறு கேட்டது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. மாணவர்களையாவது விட்டுவையுங்கள் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

தனது ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டதால் எல்லோரும் (எதிர்கட்சிகள்) என்னை எதிர்கிறார்கள் என்றும், புதிய இந்தியாவில் ஊழலுக்கு இடமில்லை என்று கூறியுள்ளார். போர் விமானங்கள், பீரங்கி வாங்குவது கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது, ஆனால் என்னுடைய ஆட்சியில் அந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என்று ரபெல் ஊழலை வசதியாக மறக்க செய்து காங்கிரசை குறை கூறினார்.

நாங்களாக போரைத் தூண்ட மாட்டோம் என்றும், போரை தூண்டினால்  எதிரியை விடமாட்டோம் என்றும் பேசியுள்ளார். ஆனால் மோடி ஆட்சிக்கு பின்பு ராணுவ மையமான பதன்கோட்டில் பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியதை வசதியாக மறந்துவிட்டார்.

நீங்கள் பிறந்த குடும்பமோ, பொருளாதார சூழ்நிலையோ உங்களை உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்காது என்று மறைமுகமாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார் மோடி.

இதையெல்லாம் விட உச்சகட்டமாக, கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசு எடுத்த எத்தனையோ முடிவுகளை இளைஞர்கள் ஆதரித்தனர். அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அவர்கள் பரப்புவதுடன், எல்லோரும் வாக்களிக்குமாறு செய்ய வேண்டும் என்று மோடி பேசினார்.

என்.சி.சி மாணவர்களை தனக்கு பிரச்சாரம் செய்யுமாறு பேசியது பிரதமர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையே காட்டுகிறது. கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் உள்ள என்.சி.சி மாணவர்கள் 15 லட்சம் பேரின் செல்போன் நம்பர், ஈமெயில் போன்றவற்றை கடிதம் மூலம் மோடி கேட்டுபெற்றார் என்பது கூடுதல் தகவல்.

மாணவர்களின் எதிர்காலம் குறித்து ஊக்கப்படுத்துவதை விட்டுவிட்டு, ஒரு நாட்டின் பிரதமரே தனக்கு பிரச்சாரம் செய்யுமாறு மாணவர்களிடம் கூறுவது எந்த நாட்டிலும் இதுவரை நடந்ததில்லை.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here