பிரதமரான பின்பு தான் மோடி தன் குடும்பத்தை பிரிந்துள்ளாரா பாண்டே?

1
1579
views

சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய தந்தி டிவி முன்னாள் தலைமை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள், காமராஜர், கக்கன், அப்துல் கலாம் போன்றவர்கள் தங்களுடைய குடும்பத்தினருக்கு சலுகை வழங்காமல், குடும்பத்தை விலக்கி வைத்திருந்தனர். குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் அவர்கள் தனது குடும்பத்தை குடியரசு மாளிகைக்கு அழைத்து சுற்றி காண்பித்து விட்டு, உடனே ஊருக்கு அனுப்பி வைத்தார். அதே போன்று தான் பிரதமர் மோடியும், பிரதமரான பின்பு தனது குடும்பத்தை தன்னுடன் தங்க வைக்கவில்லை. தன் குடும்பத்தை தள்ளியே வைத்தார் என்று காமராஜர், கக்கன், அப்துல் கலாம் போன்றவர்களோடு மோடியை ஒப்பிட்டு பேசினார் பாண்டே. தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் “பேச வைக்கப்படும்” பாண்டே, பிரதமர் மோடி குறித்து உயர்வான எண்ணம் உருவாகிற வகையில் மாணவர்கள் மனதில் விதைக்க பெரும்பாடு படுகிறார்.

பாண்டே சொல்வதை போல, அதிகாரத்திற்கு வந்த பின்பு தான், மோடி தனது குடும்பத்தை தள்ளி வைத்தாரா என்று ஆய்வு மேற்கொண்டது குட் நியூஸ் தமிழ்.

உண்மை என்ன?

மோடி அவர்கள் பிரதமாரான பின்பு, தனது குடும்பத்தை தள்ளி வைத்தார் என்பது வடிகட்டிய பொய்யாகும். தனது 18 வது வயதில் தன் குடும்பத்தை விட்டும், வீட்டை விட்டும் ஓடிப்போனவர் தான் மோடி.

பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நம்பிக்கைக்குரிய பிரச்சாரக். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பொறுத்தவரை பிரச்சாரக்காக இருப்பவர்கள், குடும்பம், குழந்தை, வீடு, வேலை என எல்லா வற்றையும் துறந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளை பரப்ப நாட்டின் எந்த இடத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது தான் முக்கிய விதி.

1950 யில் பிறந்த மோடி, தனது பள்ளிப்படிப்பை தொடரும் போதே யசோதாபென் என்ற பெண்ணை திருமணம் செய்தவர். பள்ளிப்படிப்பை முடித்த கையேடு தனது 18 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரக் காக மாற நினைக்கிறார். பிரச்சாரக்காக இருப்பவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்பதால் தான், கட்டிய மனைவியை நிற்கதியாக விட்டுவிட்டு சென்றார் மோடி.

தனது தாய்க்கு பணிவிடை செய்யாமல், வீட்டை விட்டு வெளியேறிய மோடி, கல்கத்தா, அசாம், சிலிகுரி, கவுகாத்தி போன்ற ஊர்களில் சுற்றித் திரிந்து பின்பு அல்மொராவில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்கிறார். அங்கும் புறக்கணிக்கப்படவே மீண்டும் குஜராதிற்கே வருகிறார் மோடி. அப்போது கூட தனது குடும்பத்தோடு அவர் இருக்கவில்லை. குஜராத் அரசு பேருந்து நிலையத்தில் உள்ள தனது உறவினர் கேண்டீனில் வேலை செய்து அவரோடு தங்கி இருந்தார்.

பின்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த இனாம்தாரை சந்தித்து 1971 ஆம் ஆண்டு முதல் பிரச்சாரக்காக மாறுகிறார் மோடி. அப்போதிருந்தே குடும்பத்தை கண்டுகொள்ளாமல், நாட்டில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்த மோடியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பிரச்சாரக் ஆக அமெரிக்கா விற்கு அனுப்பியது. எல்லோரும் வெளிநாடுகளுக்கு சென்று விட முடியாது. அந்த அமைப்பு தேர்ந்தெடுக்கும் நபர் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்ல முடியும். இதிலிருந்தே மோடி எந்த அளவிற்கு குடும்பத்தை கண்டுகொள்ளாமல், பிரச்சாரக் பணியை செய்துள்ளார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

Modi in America

1985 முதல் பா.ஜ.க வில் பயணம் செய்த மோடி, முதல்வர், பிரதமர் என்று பதவிகளை அடைந்தார். இந்த பயணத்தில் அவர் தன்னுடைய குடும்பத்தை பெரிதாக சந்திக்கவில்லை. மோடியின் தாயான ஹீராபென் அவர்கள் கூட மோடியின் தம்பி பங்கஜ் மோடியுடன் தான் வாழ்ந்தார். பெற்ற தன் தாயை சந்தித்தது கூட விளம்பர நிகழ்வுகளாக தான் நடந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு, தனது 64 வது பிறந்த நாளைக்கு தனது தாயை சந்தித்தார் மோடி. அப்போது ஹீராபென் அவர்கள், 5001 ரூபாய் ஜம்மு காஷ்மீர் வெள்ளத்திற்காக கொடுத்தார். இது பெரிதும் விளம்பரமாக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு facebook நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் உடனான சந்திப்பில், தன் தாய் தங்களை கஷ்டப்பட்டு வளர்த்தாக தெரிவித்தார் மோடி. இப்படி கஷ்டப்பட்டு வளர்த்த தாயை, ஏன் ஏதோ ஒரு அமைப்பிற்காக உதறித்தள்ளிவிட்டு போனார் என்று கேள்வி எழலாம்.

2016 ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாயை தடையின் போது, 95 வயதாகும் தனது தாயை பேங்க் வாசலில் பல மணி நேரம் காக்க வைத்தவர் தான் பிரதமர் மோடி. பிரதமர் மோடி ஒன்றும் ஒரே பிள்ளை அல்ல. அவருடன் அண்ணன் தம்பிகள் பிறந்தார்கள். இத்தனை ஆண் பிள்ளைகள் இருந்தும் வயதான தாயை பேங்க் வாசலில் நிறுத்தியதிலிருந்தே இதில் உள்ள விளம்பரத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.  இதை உறுதி செய்யும் விதமாக மோடியின் வயதான தாயே வரிசையில் நிற்கும் போது உங்களுக்கு என்ன கேடு வந்தது என்று இந்திய மக்களை பார்த்து பா.ஜ.க வினர் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்களும் ட்விட்டர் மூலம் கேள்வி எழுப்பினர்.

Modi Mother Heeraben at bank queue

இதிலிருந்தே தனது குடும்பத்தை தனது தாயை சந்திப்பது கூட விளம்பர வெளிச்சத்திற்குள் வருவதிலிருந்தே மோடி எந்த அளவிற்கு குடும்பத்தின் மீது ஈடுபாடு இல்லாமல் இருந்திருப்பார் என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஒருவர் பிரதமரான பின்பு இப்படி உடனே மாற முடியுமா? சிறு வயதில் இருந்தே குடும்பத்தை கண்டுகொள்ளாமல் இருப்பவர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும்.

தன் குடும்பத்தினரை தான் மோடி தள்ளி வைத்தார் என்றால், இந்திய நாடாளுமன்றத்தையும் சேர்த்தே அவர் தள்ளி வைத்தார். பிரதமரான பின்பு 19 முறை மட்டுமே நாடாளுமன்றம் வந்துள்ளார் மோடி. அதில் அரசு கொண்டு வந்த மசோதாவிற்கு ஒரு முறையும், புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்ய 5 முறையும், நன்றி உரையாற்ற 6 முறையும் பங்கேற்றுள்ளார். இரண்டே இரண்டு முறை தான் சிறப்பு விவாதத்தில் கலந்துள்ளார் மோடி. ஆனால் இந்த நான்கு வருடத்தில் 800 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார் மோடி. பிரதமரான பின்பும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரக்காக தான் செயலாற்றியுள்ளார் என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

இப்படி வீட்டிற்கும், நாட்டிற்கும் பணியாற்றாதவரை, காமராஜர், கக்கன், கலாம் போன்றவர்களோடு எப்படி ஒப்பிட முடிகிறது?

காமராஜருக்கு 6 வயது இருக்கும் போதே அவரது தந்தை இறந்து போகிறார். தனது தாய் கஷ்டப்படுவதை பார்த்த காமராஜர் தனது 11 வது வயதில் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தனது உறவினர் கடையில் வேலைக்கு சென்று தனது தாயின் கஷ்டத்தை போக்கியவர் காமராஜர். ஆனால் ஒரு அமைப்பிற்காக தனது தாயை சிறு வயதிலேயே விட்டுச் சென்றவர் மோடி.

காமராஜர் தனக்கு அளித்த Z பிரிவு பாதுகாப்பு வேண்டாம் ஒரே ஒரு போலிஸ் வாகனம் மட்டும் போதும் என்று தன்னுடன் பயணத்தில் வைத்துக் கொண்டார். ஆனால் பிரதமர் மோடியோ வெளிநாடு செல்லும் போது பத்திரிக்கையாளர்களையும், கேமரா மேனையும் அரசுப்பணத்தில் அழைத்து சென்றார். இதை தி வயர் பத்திரிக்கை நிரூபித்தது.

குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். ஆனால் ஆதார் இருந்தால் தான் சத்துணவு என்று சட்டம் போட்டவர் மோடி.

சத்துணவு திட்டத்திற்காக வீடு வீடாக சென்று பிச்சை எடுப்பேன் என்றவர் காமராஜர். ஆனால் 3000 கோடியில் படேல் சிலை அமைக்க இரும்பு அனுப்புமாறு கேட்டவர் மோடி.

விவசாயிகளுக்கு 25% மானியத்துடன் கடன் வழங்கியவர் காமராஜர். ஆனால் விவசாயிகளை சந்திக்காமல், நடிகர் நடிகைகளை சந்திப்பவர் மோடி.

காமராஜர் தான் இறக்கும் போது 130 ரூபாய் பணம் மற்றும் நான்கு சட்டை மற்றும் வேஷ்டி வைத்திருந்தார். ஆனால் டீகடைக்காரன் என்று சொல்லும் மோடியோ, தனது பெயரை பச்சை குத்தியது போல, 10 லட்ச ரூபாய்க்கு கோட் அணிந்தவர். இப்படி எந்த வகையிலும் ஒத்துப்போகாத மோடியை எப்படி காமராஜரோடு பாண்டே ஒப்பிட்டார்.

காமராஜர்,கக்கன்,கலாம் போன்றவர்கள் தங்களுக்கு அரசு பொறுப்பு வந்த பின்பு தான் குடும்பத்தினரை அருகில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் மோடியோ தனது வாழ்நாள் முழுவதும் தனது குடும்பத்தை அருகில் வைத்துக்கொள்ளவில்லை. மோடி ஒரு பிரச்சாரக் என்பதை வசதியாக மறைத்துவிட்டு, பெரும் தலைவர்களோடு ஒப்பிட்டு மாணவர்களை மூளை சலவை செய்ய நினைப்பது தரமில்லாத அரசியலாகும்.

Young ambitious writer

1 COMMENT

  1. Yasir nanbare. Swami vivekananda kooda than kudumbathai vittu vittu muzhu thuravi agha than irundhar. Appodhu avarudaya kudumbham varumaiyil dhan irundhadhu . Than kudumbham enbadhai Vida indha nattirku sevai seiyya vendum endru ninaikum ellorum appidi than iruppargal. Sanyasam endral Enna endre theriyadha ungalukku nichayam idhu purindhu kolla mudiyadhu dhan.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here