தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு உருவானதே பா.ஜ.க வால் தான்

0
2476
views

புல்வாமா தாக்குதல் மட்டுமல்ல இதற்கு முன்னர் நடந்த நாடாளுமன்ற தாக்குதல், பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல் என 20 க்கும் மேற்பட்ட தாக்குதலை இந்தியா மீது நடத்தியுள்ளது இந்த ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு. அந்த அமைப்பின் தலைவராக செயல்படுபவர் மசூத் அஸார்.

தாலிபான் என்ற தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த மசூத் அசார் 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிற்கு வந்தார். அப்போது நரசிம்ம ராவை பிரதமராக கொண்ட காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. அசார் வருவதை அறிந்த இந்திய அரசு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தது

1995 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா வந்த ஆறு வெளிநாட்டவரை கடத்திய தீவிரவாத கும்பல், மசூத் அசாரை விடுதலை செய்யச் சொல்லி இந்திய அரசை நிர்பந்தம் செய்தது. ஆனால் அசாரை விடுதலை செய்தால் அது இந்தியாவிற்கு நல்லது அல்ல என்று விடுதலை செய்ய முடியாது என்றது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு. இதனால் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு வெளிநாட்டவர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். ஒருவர் அவர்களிடம் இருந்து தப்பித்தார். நால்வரின் நிலை என்னவென்றே தெரியவில்லை..

நான்கு வருடம் கழித்து, 1999 ஆம் ஆண்டு நேபாளத்திலிருந்து டெல்லி கிளம்பிய விமானம் (IC814) தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. அப்போது வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடந்து வந்தது. மசூத் அசாரின் தம்பியால் கடத்தப்பட்ட அந்த விமானம் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கந்தகாரில் தரை இறங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அவ்வளவு தூரம் செல்ல விமானத்தில் எரிபொருள் இல்லை என்று விமான ஓட்டுனர் கூற, இந்தியாவில் உள்ள பஞ்சாப் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது அந்த விமானம். மசூத் அசார் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்ய வேண்டும், விமானம் கந்தகார் செல்ல தேவையான எரிபொருளை தரவேண்டும் மேலும் பல கோடி ரூபாய் பணம் தர வேண்டும், அப்போது தான் விமானத்தில் இருக்கும் பயணிகள் உயிரோடு திரும்புவார்கள் என்று மிரட்டினார்கள்.

கந்தகாரில் தாலிபான் பிடியில் இந்திய விமானம்

இந்திய விமானம் கடத்தப்பட்ட சமயத்தில் இப்படியான சம்பவம் நடந்தது என்பது கூட 100 நிமிடங்களுக்கு பிரதமாரான வாஜ்பாய்க்கு தெரியாது. இந்திய அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தனர். பிரதமரின் உத்தரவிற்காக காத்திருந்தனர். ஆனால் வாஜ்பாய் அரசியல் பயணம் மேற்கொண்டுவிட்டு டெல்லி திரும்பி கொண்டிருந்தார். அவரது விமானம் தரையிறங்கிய பின்பு தான் விசயமே தெரிகிறது. அதுவரை தீவிரவாதிகள் கடத்திய விமானம் பஞ்சாபில் தான் நின்றது. இந்திய ராணுவம் மற்றும் உளவுத்துறை நினைத்திருந்தால் அந்த விமானத்தை அங்கேயே முடக்கி தீவிரவாதிகளை பிடித்திருக்க முடியும். ஆனால் அப்போது பா.ஜ.க அரசிற்கு முடிவெடுக்க தெரியாமல் திருதிருவென முழித்தது.

கடத்தப்பட்ட விமானத்தின் பயணம்

எரிபொருள் இல்லாமல் அவர்களால் அங்கிருந்து செல்ல முடியாத நிலை இருந்தும், விமானத்தை மீட்க பா.ஜ.க எந்த முயற்சியும் எடுக்க வில்லை. நீ செய் நீதான் பொறுப்பு என்று ஒருவரை ஒருவர் மாற்றி குற்றம் சுமத்திக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பஞ்சாபிலேயே நின்றது அந்த விமானம். இறுதியில் கையாலாகாத வாஜ்பாய் அரசு, தீவிரவாதிகளை விடுதலை செய்ய முன்வந்தது. மேலும் விமானத்திற்கு தேவையான எரிபொருளையும் ராணுவத்தை விட்டே தர வைத்தது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்படியொரு விமானம் பஞ்சாபில் வந்து தரையிறங்கி உள்ளது என்று மத்திய அரசு பஞ்சாப் காவல்துறைக்கு கூட சொல்ல வில்லை. பஞ்சாப் போலிஸ் தலைவரான சரப்ஜித் சிங், இந்த விமானத்தை போகவிடக்கூடாது என்று மத்திய அரசு என்னிடம் கூறி இருந்தால் நான் என்னிடம் உள்ள ஆன்டி டெரரிஸ்ட் படை மூலம் தடுத்திருந்திருப்பேன் என்றார். மத்திய பா.ஜ.க அரசு தீவிரவாதிகளை விடுதலை செய்யவே நினைத்தனரே தவிர, விமானத்தை மீட்பது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

அப்போது உளவுத்துறை முக்கிய தலைவராக இருந்த துளத், விமானத்திற்கு எரிபொருள் கொடுப்பதை போல சென்று விமானத்தின் டயரை பழுதடைய செய்வதன் மூலம், தீவிரவாதிகளை தப்பிக்க விடாமல் செய்யலாம் என்று திட்டம் போட்டார். அதற்காக NSG (national security guard) உதவியை நாடினார். ஆனால் அவர்கள் வரவில்லை. என்னவென்று கேட்டதற்கு, பஞ்சாபில் இருந்து அமிர்தசரஸ் வரும் போது ட்ராபிக்கில் மாட்டிகொண்டோம் அதனால் தாமதம் ஆகிவிட்டது என்றனர்.

மசூத் அசார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளையும் அதே விமானத்தில் அனுப்பி வைத்தது பா.ஜ.க. இந்தியாவிலிருந்து கிளம்பிய அந்த விமானம் துபாய் சென்று பின்பு கந்தகார் சென்றது. துபாயில் சில பயணிகளும், கந்தகாரில் சில பயணிகளும் விடுதலை செய்யப்பட்டனர். சில பயணிகள் கொல்லப்பட்டனர்.

மசூத் அசாருடன் ஜஸ்வந்த் சிங்

அப்போது அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் தான் இவர்களை அனுப்பிவைத்தது. மசூத் அசாரை ஏன் விடுதலை செய்தீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் சரமாரியாக கேட்க, இது என்னுடைய முடிவல்ல. அமைச்சரவையின் முடிவு என்றும், அத்வானி மற்றும் ஜோசி போன்றோர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் வாஜ்பாய் தான் தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று உறுதியாக் இருந்தார் என்றார் ஜஸ்வந்த் சிங்.

மத்திய பா.ஜ.க அரசால் விடுதலை செய்யப்பட்ட மசூத் அசார் கந்தகாரில் இறங்கி, 10000 நபர்களை திரட்டி, ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற அமைப்பை தொடங்கினான். அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறான். அன்று அதிகாரிகளை சரியாக வழிநடத்தாமல், முட்டாள் தனமான முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் இந்த அமைப்பே உருவாகி இருக்காது. இந்த அமைப்பு உருவானதற்கு முழுக் காரணமும் பா.ஜ.க தான் என்று காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டியது.

அப்போது வாஜ்பாய் எப்படி சரிவர செயல்படவில்லையோ அதே போன்று மோடியும் உளவுத்துறை எச்சரித்தும் கண்டுகொள்ளாததால் அப்பாவி ராணுவ வீரர்களை நாம் இன்று இழந்துள்ளோம்.

follow us on facebook: www.facebook.com/goodnews.emagazine
follow us on youtube: https://www.youtube.com/channel/UCNiSzUi3bHW4VuJDVHYL6ow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here