பட்டேல் சிலை – 2000 கோடி ஊழல்?

0
662
views

உலகின் மிக உயரமான சிலையான பட்டேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த சிலைக்கு 3000 கோடி செலவு செய்தது குறித்து நாடு முழுவதும் கண்டனம் எழுந்து வருகிறது. குஜராத் மாவட்டத்தில் மட்டும் 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சிலைக்கு காடுகளும், பாதைகளும் அழிக்கப்பட்டதாக போராடியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிலை அமைத்தில் 720 கோடி முதல் 2000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உலகின் இரண்டாவது உயர சிலையான புத்தர் சிலை, பட்டேல் சிலையை விட 54 மீட்டர் மட்டுமே உயரம் குறைவானது. அந்த புத்தர் சிலையை அமைக்க, சிலைக்கு மட்டும் 18 மில்லியன் டாலர் தான் சீன அரசால் செலவழிக்கப் பட்டுள்ளது. ஆனால் 54 மீட்டர் மட்டுமே அதிக உயரம் கொண்ட பட்டேல் சிலைக்கு மட்டும் 180 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டுள்ளது.

180 மில்லியன் டாலர் என்பது சிலைக்கு மட்டுமான செலவு. சீனாவில் உள்ள புத்த சிலை கோவில் 55 மில்லியன் டாலரில் (396 கோடி) முழுவதுமாக கட்டப்பட்டது. வெறும் 54 மீட்டர் அதிகம் கொண்ட பட்டேல் சிலைக்கு 420 மில்லியன் டாலர் (3000 கோடி) செலவிடப்பட்டுள்ளது.

54 மீட்டர் உயரத்திற்கு கூடுதலாக 20 மில்லியன் டாலர் ஒதுக்கினாலும், வெறும் 600 முதல் 1000 கோடியில் கட்டி முடித்திருக்கலாம். ஆனால் 3000 கோடி செலவு செய்துள்ளார்கள்.

2000 கோடி என்ன ஆனது? சிலை அமைப்பதற்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த செலவு பட்டியலை வெளியிடுமா மோடி அரசு என்று சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புத்த சிலை விபரம்:

https://en.m.wikipedia.org/wiki/Spring_Temple_Buddha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here