உணவிற்கே கஷ்டப்பட்டவர், பில்லியன் டாலர் சம்பாதித்த கதை

0
2085
views

வாழ்வதற்கு ஒரு வேலை இல்லை. தங்குவதற்கு இடமும் இல்லை. கையில் கைக்குழந்தை, கணவனும் விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார். ஆறுதலாக இருந்த அம்மாவும் இறந்துவிட்டார். இனி வாழ்ந்து ஒரு பயனும் இல்லை என்று தற்கொலைக்கு சென்ற ஒரு பெண், வரலாறு காணாத ஒரு எழுத்தாளராக மாறி, உலகின் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்தார். அவர் தான் ஹாரி பாட்டர் சீரீஸ் எழுதிய ஜே.கே.ரௌலிங்.

ஜே.கே.ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் புத்தகங்கள் 73 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 450 மில்லியன் புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளது. கடைசியாக வெளியான ஹாரி பாட்டர் படத்தின் மூலம் மட்டும் 16 பில்லியன் டாலர் கிடைத்தது. ஆனால் இவர் போல் கடும் துயரத்தை வாழ்வில் அனுபவித்தவர் யாருமில்லை.

ரௌலிங் தனது இளமை பருவத்தில் எல்லோரும் போல மகிழ்ச்சியாக இருக்க நினைத்தார். ஆனால் அவருடைய 17 வது வயதில் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு எழுதுவது என்றால் மிகவும் பிடிக்கும். ஹாரி பாட்டர் என்கிற கதை எழுத ஆரம்பிக்கிறார். ஆனால் துன்பம் மீண்டும் வந்தது. அவருடைய அம்மா இறந்து போகிறார். 25 வயது பெண் யாருமின்றி அனாதையாக நிற்கிறார். தான் வாழ்ந்து வந்த ஊரை காலி செய்துவிட்டு, போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்றார். அங்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் வேலையை செய்தார். நாட்கள் நகர்ந்தாலும் எழுத்து ஆர்வம் குறையவில்லை. மீண்டும் எழுத தொடங்கினார்.

26 வயது இளம் பெண்ணுக்கு வரும் காதல் அவருக்கும் வந்தது. காதலித்து திருமணம் செய்துகொண்டார். விரும்பியவரை திருமணம் செய்து கொண்டதால் இனி நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என எண்ணிய ரௌலிங்க்கு மீண்டும் சோகம் வந்தது. கணவன் மனைவி இருவருக்கும் சண்டை அடிக்கடி வர ஆரம்பித்தது. ஜெஸ்சிகா என்கிற அழகிய பெண் குழந்தைப் பிறந்தாலும், திருமணம் ஆகி 13 மாதங்களிலேயே விவாகரத்து ஆனது. தன் மகளையும், தான் எழுதிய புத்தகத்தின் நகல்களையும் எடுத்துக்கொண்டு போர்ச்சுக்கல் நாட்டை விட்டே வெளியேறினார் ரௌலிங்.

புத்தகத்தை எப்படியாவது முடித்து விட வேண்டும் என்ற முனைப்புடன், காஃபே வில் குழந்தையை தூங்க வைத்துவிட்டு எழுத ஆரம்பிப்பார். 3 பாகங்களை எழுதிவிட்டு அதை ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பினார். இது வேலைக்கு ஆகாது என்று பதில் வந்தது. மனம் தளரவில்லை. வேறு பதிப்பகங்களுக்கு அனுப்பினார். கிட்டத்தட்ட 12 பதிப்பகங்களுக்கு அனுப்பினார். எல்லோருமே இது சரிவராது என்றே பதில் அனுப்பினர். தன்னுடைய mail முழுவதும் rejection, rejection என்பதை தவிர எந்த பதிலும் வரவில்லை. தன் பிரச்சனையெல்லாம் இந்த புத்தகங்கள் மூலம் தீர்ந்துவிடும் என்று நம்பியிருந்த ரௌலிங்கிற்கு எல்லோரும் reject செய்தது பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.

தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்கிறார். இருந்தாலும் தன் குழந்தையை எண்ணி கவலை கொள்கிறார். திடீரென ரௌலிங் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு. லண்டனில் இருக்கும் ஒரு சிறிய பதிப்பகமான bloomsbury என்ற பதிப்பகத்தின் உரிமையாளர் பேசுகிறார்.  உங்களுடைய புத்தக நகல்களை, என் 8 வயது மகள் படித்துவிட்டு, அடுத்த பாகம் எப்போது வரும் என்று கேட்கிறார். எனவே இந்த புத்தகத்தை நாங்கள் வெளியிடுகிறோம் என்றார். இந்த பதிப்பகமும் ஆரம்பத்தில் ரௌலின் உடைய புத்தகத்தை நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரௌலிங்கிற்கு தலை கால் புரியவில்லை. சந்தோசத்தில் குதிக்கிறார். புத்தகம் அச்சடிக்கப்படுகிறது. குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எழுத ஆரம்பிக்கிறார் ரௌலிங். அவரது புத்தகங்கள் மொத்தம் 450 மில்லியன் பிரதிகள் விற்றது. தனது 42 வயதில் அவர் வெளியிட்ட புத்தகம், ஒரே நாளில் 11 மில்லியன் பிரதிகள் விற்றது. சிறந்த எழுத்தாளருக்கான விருதும் வந்து சேர்கிறது.

இந்நிலையில் இக்கதையை திரைப்படமாக எடுக்க ரௌலிங்யிடம் அணுகுகிறார்கள். சம்மதிக்கிறார். திரைப்படங்கள் மூலம் பல பில்லியன் டாலர் வருமானம் ரௌலிங்கிற்கு கிடைக்கிறது. வேலையில்லாமல் கைகுழந்தையோடு இருந்த ரௌலிங் பெரும் தொழிலதிபர் ஆனார். போர்ப்ஸ் பத்திரிக்கை அவரை உலகின் பணக்காரர் பட்டியலில் சேர்த்தது.

ஆனால் இதெல்லாம் ஒரே இரவில் நடந்துவிடவில்லை. தோல்வி மேல் தோல்வி. துன்பத்திற்கு மேல் துன்பத்தை அனுபவித்த பின்பு தான் ரௌலிங்கிற்கு இந்த வாழ்க்கை கிடைத்தது. காரணம் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவரது கனவை அவர் விடவில்லை.

உங்களுக்கும் ஏதேனும் கனவு அல்லது குறிக்கோள் இருந்து, தொடர்ந்து தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்திருந்தால் துவண்டுவிடாதீர்கள். உங்கள் வாழ்கையில் கடினமான நேரங்களில் நீங்கள் பயணித்துக் கொண்டிருந்தாலும், உங்கள் கனவை விட்டுவிடாதீர்கள். நினைத்துப் பாருங்கள், ரௌலிங் மட்டும் தனது 30 வயதில் தற்கொலை செய்திருந்தால், இந்த நிலைமைக்கு வந்திருக்க முடிமா? எனவே தோல்வியை வெற்றியாக்க முயலுங்கள். காலங்கள் ஆகலாம். ஆனால் கனவு நிச்சயம் நிறைவேறும்.

யாருக்கு தெரியும், உலகின் சாதனை மனிதனாக நீங்கள் ஒரு நாள் வரலாம். எனவே ரௌலிங்கை போல, உங்கள் கதையை நீங்கள் உருவாக்குங்கள். உன்னால் முடியும் தோழா..

(இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால், எங்களுக்கு ஆதரவு தர நினைத்தால் உங்கள் நண்பர்களுக்கு இதை பகிருங்கள்)

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here