புற்றுநோய் செல்களை அழிக்கும் புதினா டீ செய்யலாம் வாங்க

0
857
views

நாம் உண்ணும் உணவு என்பது வெறும் பசியை போக்குவது மட்டுமல்லாமல், அதில் மருத்துவமும் இருந்து வந்தது. நாளடைவில் மக்கள் அனைவரும் fast food முறைக்கு மாறியதால், சின்னச் சின்ன ஆரோக்கியமுள்ள உணவுகள் கூட மறக்கடிக்கப்பட்டுவிட்டது. அந்த வகையில் நாம் மறந்தது தான் புதினா டீ. அதை செய்யும் முறையை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

தேவையானவை:

புதினா இலை  – 5
தேயிலை – 1 டீஸ்பூண்
தேன் அல்லது பனங்கற்கண்டு – 1 டீஸ்பூண்
பால் – 1/4 டம்ளர் (விருப்பப்பட்டால்)

செய்முறை:

ஒரு டம்ளர் நீரில் தேயிலை மற்றும் புதினா இலையை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். பாதியாக சுண்டியதும், அதை வடிகட்டி அதனுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகவும். விரும்பினால் பால் சேர்த்துக் கொண்டு பருகலாம்.

பயன்கள்:

புதினாவில் மென்தால் நிறைந்துள்ளது. இது சுவாச மண்டல பிரச்சனையை சரி செய்யும். வாய் துர்நாற்றத்தை போக்கும். இதில் உள்ள கால்சியம் பற்களை வலுவாக்கும். ஆண்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் உட்புற புண்களை குணமாக்கும். செரிமானத்தை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் செல்களை அழிக்கும்.

2 நிமிடத்தில் போடக்கூடிய புதினா டீ முறையை உங்கள் வீடுகளில் பயன்படுத்த ஆரம்பியுங்கள். புற்றுநோய் இல்லாத எதிர்கால சந்ததியினரை உருவாக்கலாம்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here