இஸ்லாமியர்களின் கடைசி கலீபா அப்துல் ஹமீத் வீழ்ந்த வரலாறு

1
657
views

இஸ்லாமியர்களின் கடைசி கலிஃபா வான உஸ்மானிய தேசத்தை 30 வருடத்திற்கு மேல் ஆட்சி செய்த சுல்தான் அப்துல் ஹமீது – 2 அவர்கள் இறந்த தினம் Feb 10, 1918. 101 வருடங்கள் கடந்து விட்டது.

Abdul hamid

யூதர்களின் தலைவன் தியோடர் ஹெர்சல் 150 மில்லியன் பவுண்டு தங்கம் தருகிறோம். பாலஸ்தீனத்தில் சிறிய இடம் தாருங்கள் என்று கேட்டார்.

“நான் உயிரோடு இருக்கும் வரை பாலஸ்தீனத்தில் யூத தேசம் உருவாகாது என்று முழங்கியவர். கலீஃபா இல்லாத நிலை ஒன்று உருவானால் தான் உங்களால் யூத தேசத்தை உருவாக்க முடியும்” என்று யூத தலைவனிடம் சவால் விட்டவர்.

இதன் பின்பு உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தி கலீஃபா ஆட்சியை இறக்கி, மக்களாட்சியை ஏற்படுத்தினர் யூதர்கள்.

1876 முதல் 1909 வரை கலீபாவாக இருந்தார் அப்துல் ஹமீது. இவர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் அரசியலமைப்பு நிர்வாகத்தை மாற்றி ஷரியத் அடிப்படையிலான ஆட்சியை அமல்படுத்தினார்.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் நெருக்கடியான நிலையிலும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியவர். கலிஃபாவின் 90% நிதியை பள்ளி, கல்லூரி, மருத்துவமனை கட்டுவதில் செலவிட்டவர். இஸ்தான்புலில் இருந்து பாலஸ்தீன் வழியாக மதினா வரை செல்லும் Hejaz ரயில் பாதையை உருவாக்கியவர். ருமேலியா, அனடோலியா, பாக்தாத் ரயில் திட்டத்தையும் செயல்படுத்தியவர்.

அப்துல் ஹமீத் – 2 தான் முழுமையான அதிகாரம் பொருந்திய கடைசி கலிஃபாக இருந்தவர். 1908 ஆம் ஆண்டு என்வர் பாஷா என்ற ராணுவ வீரரின் தலைமையில் Young Turk Revolution என்ற புரட்சி படை உருவானது. கலீபாவிற்கு எதிராக போராடியவர்கள், மீண்டும் பாராளுமன்ற மக்களாட்சி முறையை அமல்படுத்த கலீபாவை நிர்பந்தித்தனர். ஆரம்பத்தில் மக்களின் ஆதரவு அவர்களுக்கு கிடைத்ததால், வேறு வழியில்லாமல் பாராளுமன்ற ஆட்சி முறையை மீண்டும் கொண்டு வந்தார் கலீபா அப்துல் ஹமீது.

Young Turks Revolution

பாராளுமன்ற மேலவை செனட் உறுப்பினர்களை நியமிக்கும் அளவிற்கு மட்டுமே கலீபாவின் அதிகாரம் குறைக்கப்பட்டு, ஷரியத் அடிப்படையிலான கலீபாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரதமர், அமைச்சர்கள் பொறுப்பேற்றார்கள். என்வர் பாஷா அப்துல் ஹமீதை நீக்கிவிட்டு தன் சகோதரர் முகம்மத் அவர்களை கலீபாவாக நியமித்தார்.

Enver Basha

முகம்மத் மற்றும் என்வர் பாஷா வால் மாபெரும் அரசை நிர்வாகம் செய்ய முடியவில்லை. மக்கள் அனைவரும் மீண்டும் ஷரியத் ஆட்சி வேண்டும், அப்துல் ஹமீத் வேண்டும் என்று போராடத் துவங்கினார்கள். இந்த சமயத்தில் தான் முதலாம் உலகப் போர் உருவானது. ஜெர்மனியோடு சேர்ந்த ஒட்டமன் பேரரசின் கலீபா முகம்மத், சென்ரல் ஆலிஸ் எனப்படும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஜிகாத் போரை அறிவித்தார்.

ஆனால் சரியான திட்டமிடுதல் இல்லாமல், 1918 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரில் ஒட்டமன் பேரரசு தோல்வியடைந்து அந்நாட்டின் கட்டமைப்பே சிதைந்தது. அப்துல் ஹமீத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்த முக்கிய தலைவர்கள் எல்லோரும் பிரிட்டிஷ் படைக்கு பயந்து ஓடினார்கள்.

அப்துல் ஹமீதிடமிருந்து தான் அரசியல் விளையாட்டையே நான் கற்றுக் கொண்டேன் என்றார் ஜெர்மானிய பேரரசின் மன்னர் கைசர்.

முதலாம் உலகப் போரின் போது, நான் மட்டும் கலீபாவாக இருந்திருந்தால், ஐரோப்பியர்களை தங்களுக்குள்ளேயே சண்டையிட வைத்து, இஸ்லாமியர்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் செய்திருப்பேன் என்றார் அப்துல் ஹமீத்.

அவருடைய முடிவெடுக்கும் திறனைக் கண்டு வியப்படைந்தோம் என்றனர் ஆங்கிலேயர்கள்.

மாபெரும் இஸ்லாமிய தேசத்தை ஆண்ட அப்துல் ஹமீத், 1918 ஆம் ஆண்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். காலை நேர பஜ்ர் தொழுகை தொழுத பின்பு இறந்தார். இஸ்லாமியர்களின் அதிகாரம் பொருந்திய கடைசி கலீபா இறந்து 101 வருடங்கள் ஆகி விட்டது.

யூதர்கள் செய்த சூழ்ச்சியாலும், அவர்கள் உருவாக்கிய முதல் உலகப் போராலும் இஸ்லாமிய கலீபா ஆட்சி முடிவுக்கு வந்தது. இது நடந்து 25 ஆண்டுகளுக்கு பின்பு யூத தேசம் இஸ்ரேலும் உருவானது.

யாசிர்

Young ambitious writer

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here