ராணுவ வீரரை பிச்சை எடுக்க வைத்த மோடி அரசு

0
452
views

சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான போரில் கலந்து கொண்ட ராணுவ வீரர் ஒருவர் தற்போது பிச்சை எடுத்து வருவது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு உதவுங்கள் என்று அவர் பலகையில் எழுதி டெல்லியில் நின்றது பலரையும் கண் கலங்க செய்துள்ளது.

ராணுவ வீரரான பீதாம்பரம், 1965 மற்றும் 71 ஆம் ஆண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் நாட்டுடனான போரில் கலந்து கொண்டவர். தற்போது ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பீதாம்பரம் சமீபத்தில் ஒரு விபத்தை சந்தித்துள்ளார். இதனால் வருமானமின்றி பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பீதாம்பரம் அவர்கள் தனது மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.

தனக்கு உதவ வேண்டி ராணுவத்திடம் முறையீடு செய்த பீதாம்பரத்திற்கு சில காரணத்தை சொல்லி உதவாமல் இருந்துள்ளார்கள். எனக்கு சில காரணங்களால் ராணுவமும் உதவவில்லை நீங்கள் உதவி செய்யுங்கள் என்று அவர் டெல்லியில் பிச்சை எடுத்துள்ளார்.

இதனை பார்த்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் காம்பிர், அவரிடம் இது குறித்து விசாரித்து, அவரது புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு, இவருக்கு ராணுவம் சில காரணங்களால் உதவவில்லை. இவருக்கு வேண்டியதை உடனே செய்ய வேண்டும் என்று, பாதுகாப்பு துறை அமைச்சகத்தையும், நிர்மலா சீதாராமனையும் டேக் செய்தார் காம்பிர்.

கம்பீர் செய்த ட்விட்:
https://twitter.com/GautamGambhir/status/1091750711984078848/photo/1

அவருக்கு தேவையானதை செய்கிறோம் என்று 15 நிமிடத்தில் ட்விட்டரில் பதில் அளித்துள்ளது பாதுகாப்பு துறை அமைச்சகம்.

ஒரு ராணுவ வீரர் தனக்கு ஏற்பட்ட நிலைமையை பாதுகாப்பு துறை அமைச்சக பார்வைக்கு கொண்டு செல்லாமலா இருந்திருப்பார். கடிதம் கூடவா எழுதாமல் இருந்திருப்பார். தனக்கு யாருமே உதவவில்லை என்பதால் தான் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் பீதாம்பரம்.

காம்பிர் செய்த ட்விட்டிற்கு 15 நிமிடத்தில் பதில் கொடுத்த நிர்மலா சீதாராமன் தலைமையிலான அமைச்சகம், அந்த ராணுவ வீரர் உதவி கேட்ட போதே செய்திருந்தால் இந்த நிலைமை அவருக்கு வந்திருக்குமா? காம்பிர் ஒரு பிரபலம் என்பதால் இந்த விஷயம் பரவிவிடும் என்பதற்காக கூட ட்விட்டிற்கு பதில் சொல்லி இருப்பார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் நெட்டிசன்கள்.

ஏற்கனவே ராணுவத்தில் சாப்பாடு சரியில்லை என்றும், தங்களுக்கு தேவையான ஆயுதங்களை வாங்கித்தர தாமதம் செய்கிறார்கள் என்றும் ராணுவ வீரர்களிடம் இருந்தே குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஒரு ராணுவ வீரரை தலைநகர் டெல்லியில் பிச்சை எடுக்க வைத்துள்ளது மோடி அரசு. மக்களை சந்திக்காமல் அமைச்சர் ஆகி இருக்கும் நிர்மலா சீதாராமன் இனியாவது ராணுவ வீரர்களுக்கு பென்சன் கொடுக்கும் திட்டத்தில் உள்ள டெக்னிக்கல் பிரச்சனைகளை களைவாரா? எதற்கெடுத்தாலும் எல்லையில் ராணுவ வீரர்கள் என்று சொல்லும் பா.ஜ.க இனியாவது ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கண்டுகொள்ளுமா?

காம்பிர் அந்த ட்விட் செய்யவில்லை என்றால் ஒரு ராணுவ வீரரின் இந்த நிலைமையை நாம் அறிந்திருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here