பதவிக்காக பாசிசத்தோடு கைகோர்க்காத மூப்பனார் | அவரது மகன் இப்படி செய்யலாமா?

0
1599
views

அதிமுக – பாஜக கூட்டணியில் G.K.வாசன் இணைந்து ஒரு தொகுதி பெற்றுள்ளார். காங்கிரஸ் கொள்கையோடு செயல்படும் தமாக எப்படி பாஜக வுடன் கூட்டணி சேர முடிந்தது என்றும், கட்சியை காப்பாற்ற தன் தொண்டர்களை GK வாசன் அடமானம் வைத்து விட்டார் எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இன்று GK.வாசனுக்கு வந்த நிலை 1999 ல், மூப்பனாருக்கும் வந்தது. ஆனால் அவர் பாசிசவாதிகளுடன் கூட்டணி சேரவில்லை.

அன்று மூப்பனார் என்ன செய்தார்?

1998 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது மூப்பனாரின் தமாக. அந்த கூட்டணி 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்தது. அதிமுக-பாஜக கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் – சிபிஎம் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

பின்பு ஜெயலலிதா அவர்கள் வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தார். மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது திமுக. காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி சேர்ந்தது அதிமுக. திமுக பாஜகவுடன் சேர்ந்ததால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினார் மூப்பனார். காங்கிரஸில் இருந்து தனிக் கட்சி ஆரம்பித்த மூப்பனார், காங்கிரஸ் இருக்கும் அதிமுக கூட்டணியில் இணையவில்லை. எதிர் முகாமில் காங்கிரஸ் இருப்பதால் அவர் பாசிச கூட்டணியில் இணையவில்லை. எம்.பி சீட் கிடைக்க வேண்டும் என்றோ, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றோ பாசிச கூட்டணியை ஆதரிக்கவில்லை.

கட்சி, பதவியை விட கொள்கையில் உறுதியாக இருந்த மூப்பனார் அவர்கள், தனது தலைமையில் தமாக, விசிக, புதிய தமிழகம் கூட்டணியை ஏற்படுத்தி பாசிச பாஜகவை எதிர்த்து போட்டியிட்டார். அந்த தேர்தலில் தமாக கூட்டணி தோல்வி அடைந்தது. திமுக- பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. வெற்றி வாய்ப்பு இருந்தும் பாசிசத்தை எதிர்ப்பதில் எவ்வித சமரசமுமின்றி போராடியவர் மூப்பனார்.

ஆனால் அவரது மகன் ஜி.கே.வாசனோ கட்சியை காப்பாற்ற போகிறேன் என்று மக்கள் விரோத, பாசிசவாதிகளுடன் கைகோர்த்துள்ளார். மூப்பனாருக்கு இருந்த கொள்கை அவரது மகன் வாசனிடம் இல்லை என்று பலரும் வருத்தம் தெரிவித்துவருகிறார்கள்.

மூப்பனாருக்காவது 3 வது அணி வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் வாசனுக்கோ டிடிவி தினகரன் என்ற வாய்ப்பு இருந்தும் அவர் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.

பாசிசத்திற்கு எதிராக ஓட்டுக் கேட்ட தமாக நிர்வாகிகள் எப்படி பாஜக விற்கு ஆதரவாக ஓட்டுக் கேட்பார்கள் என்ற கேள்வியும், மூப்பனாரின் மகன் என்று வாசன் எப்படி இனி கூறிக் கொள்ள முடியும் என்ற கேள்வியும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here