பெரும் துயரத்தில் இருக்கிறீர்களா? படிங்க

0
1743
views

வ்வொரு மனிதனின் வாழ்விலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. ஆனால் இந்த பிரச்சனைகள் திடிரென நிகழ்ந்துவிட கூடியவையும் அல்ல. எந்த ஒன்றுமே திடீரென நிகழ்ந்துவிடாது.

பல நூற்றாண்டுகளை கண்ட மரம், ஒரு நாள் ஓங்கியடித்த புயலில் வேரோடு மண்ணில் விழுந்து கிடந்தது. வன்மை முறுக்கேறிய இத்தனை பெரிய மரம் எப்படி ஒரே நாள் புயலை எதிர்த்து நிற்க முடியாமல் விழுந்துவிட்டது என்கிற விபரம் புரியாமல் ஊர் மக்கள் ஒன்றுகூடி வியந்தனர்.

அப்போது அங்கே ஒரு துறவி வந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவர், “இவ்வளவு வலிமைமிக்க மரம், ஒரு நாள் புயலில் எப்படி விழுந்திருக்க முடியும்?” என்று துறவியை பார்த்து கேட்டார்.

மரத்தின் ஒவ்வொரு பகுதியையும் உற்று கவனித்தார் துறவி. வெளித்தோற்றத்தில் வலுவாக தோன்றினாலும், மரத்தின் உள்ளே ஒரு பெரிய பொந்து வீழ்ந்திருப்பதை கண்டவர்,

“நண்பர்களே இந்த மரத்தின் வீழ்ச்சி ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல. பல நாட்கள் உள்ளே நிகழ்ந்த உள் அழிவு தான், இன்று இந்த மரம் புயலை எதிர்கொள்ள முடியாமல் விழுந்து கிடப்பதற்கு காரணம். எந்த ஒன்றுமே ஒரு நாள் நிகழ்வில் வீழ்வதில்லை என்ற உண்மையை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்” என்றார் துறவி.

இக்கதையில் வருவதை போல, எந்த ஒன்றுமே திடீரென நிகழ்வதில்லை. நமக்கு வரும் பிரச்சனையும் அதைப் போல தான். ஆரம்பத்தில் நாம் செய்யும் சிறு சிறு தவறு தான், ஒரு நாளில் பெரும் பிரச்சனையாக நம் முன்னால் வந்து நிற்கும். எனவே பிரச்சனைகள் வருவது குறித்து கவலை கொள்ளாதீர்கள். சிறு சிறு தவறுகளை திருத்திக் கொண்டாலே பெரும் பிரச்சனைகளில் இருந்து மீளலாம்.

 

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here