ஏழடி உயரம் இருந்த இந்த பெண்மணி எத்தனை வருடங்கள் வாழ்ந்தார்கள் தெரியுமா?

0
1454
views

சீனா நாட்டைச் சேர்ந்தவர் தான் லி சிங்யோன். உலகிலேயே அதிக வயது வரை வாழ்ந்தவராக இவர் கருதப்படுகிறார். ஆனால் இவரின் பிறப்பை பற்றி சரியான தகவல்கள் எதுவும் இல்லை. லி சிங்யோன் அவர்கள் 1736 ஆ ஆண்டு பிறந்தார் எனவும், ஆனால் வரலாற்றின் படி பார்க்கும் போது, இவர் 1677 ஆம் ஆண்டிலேயே பிறந்திருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

லி சிங்யோன் எந்த ஆண்டில் பிறந்திருந்தாலும், இவரது வயது 197 அல்லது 256 ஆக இருக்கக் கூடும். சீன அரசின் வரலாற்று கோப்புகளில், லீயின் 150 மற்றும் 200 ஆவது பிறந்த நாட்களுக்கான வாழ்த்து தெரிவித்த நிகழ்வுகள் உள்ளது.

இவர் தனது பத்தாவது வயதில் இருந்தே கன்சூ, ஷான்ஷி, திபெத், சியாம் மற்றும் மஞ்சூரியா போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்து, நிறைய மூலிகைகளை சேகரித்துள்ளார்.

மூலிகைகள் மற்றும் அரிசி, ஒயின் சாப்பிட்டே உயிர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர் நல்ல கண் பார்வை, விறுவிறுப்பான உடல் திறன், ஏழடி உயரம், நீளமான நகங்கள், சிவந்த நிறம் ஆகிய தோற்றத்தை கொண்டிருந்ததாக கூறுகிறார்கள்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here