வண்டி நிற்கும் போது பாத்ரூம் பயன்படுத்துவதை தவிர்ப்போம்

0
1013
views

துரை ரயில்வே நிலையத்தில் ஒரு பணியாளர் தண்டவாளங்களில் உள்ள கழிவுகள் மீது பொடி போடுகிறார். கையுறை மட்டுமே அணிந்திருந்தார். மூக்கை மூடிக்கொள்ளவும், காலில் அணிவதற்கு ஷூ கூட கிடையாது. இருந்தாலும், பயணிகளான நமக்கு நோய் பரவாமல் இருக்க, இவர் செய்யும் இந்த சேவை மதிக்கத்தக்கது. ஆனாலும் இவருக்கு வழங்கப்படும் சம்பளம் மிகவும் குறைவு. வண்டி நிற்கும்போது யாரும் பாத்ரூம் பயன்படுத்த வேண்டாம் என்று எத்தனை முறை கூறினாலும் எவரும் அதை கண்டுகொள்வதில்லை. எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் நாம் இந்த வேலையை செய்வோமா? என்பதை அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும். இந்த படத்தைப் பார்த்தாவது பயணிகளான நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். வண்டி நிற்கும்போது பாத்ரூம் பயன்படுத்துவதை தவிர்ப்போ ம். மாற்றம் காணுவோம்.

படித்தவர்கள் இவரின் பணியை கண்டு இரக்கப்படாமல் இவரது பணியை எளிமைப்படுத்தும் படியான கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும். உங்களை காலா காலத்திற்கும் அவர்கள் போற்றுவார்கள்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here