பந்த்தால் குழந்தை இறந்தது என்று வதந்தி பரப்பிய பா.ஜ.க

0
890
views

பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து திங்கட்கிழமை நாடு முழுவதும் பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தது காங்கிரஸ் கட்சி. அன்றைய தினம் பீகாரில் 2 வயது குழந்தை பந்த் காரணமாக இறந்துவிட்டது என்ற வதந்தியை பரப்பியது பா.ஜ.க. மத்திய அமைச்சரான ரவி சங்கர் பிரசாத் அவர்களே இந்த குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

இந்நிலையில் குழந்தை பந்தினால் இறக்கவில்லை என்றும், உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தான் குழந்தை இறந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

பீகாரைச் சேர்ந்த கௌரிகுமாரி என்ற 2 வயது குழந்தை, கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்குடன் அவதிப்பட்டு வந்துள்ளார். மிகவும் முடியவில்லை என்றவுடன் கௌரியின் தந்தை, ஜெகனாபாத் மாவட்டத்தில் இருக்கும் சாதர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அந்த குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

கௌரியின் தந்தையான பிரமோத் மாஞ்சி, தனது குழந்தையுடன் பால்பிகா என்ற மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். குழந்தை இறப்பு குறித்து பேட்டியளித்த அவர், என் குழந்தையை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ்காக காத்துக் கொண்டே இருந்தேன். எந்த ஒரு நான்கு சக்கர வாகனங்களும் வரவில்லை. இறுதியில் ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனை வந்தோம். மருத்துவமனை வரும் வழியில், பந்தில் ஈடுபட்டவர்கள் நாங்கள் சென்ற ஆட்டோவை மறைத்தனர் என்றார்.

இப்படி உள்ளூர் பத்திரிக்கையாளரிடம் பேட்டி கொடுத்த பிரமோத், பந்த் யில் ஈடுபட்டிருந்தவர்கள் எங்கள் ஆட்டோவை மறைத்ததால் தான் தாமதம் ஏற்பட்டது என்றும், அதனால் தான் மருத்துவமனை செல்லும் வழியிலேயே கௌரி இறந்துவிட்டார் எனவும் கூறியிருந்தார். தற்போது நாங்கள் சென்ற ஆட்டோவை யாரும் மறைக்கவில்லை என்று மாற்றி கூறியுள்ளார்.

இது குறித்து ஜெகனாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் அலோக் ரஞ்சன் கோஷ் அவர்களிடம் பேசிய போது, பந்தினால் தான் குழந்தை இறந்தது என்பதை நிராகரித்தார்.

முதற்கட்ட விசாரணையில், குழந்தை கௌரி வரும் வழியில் டிராபிக் ஜாமாலோ அல்லது பந்தினாலோ இறக்கவில்லை என்றும், குழந்தையின் பெற்றோர்கள், கௌரியை மருத்துவமனைக்கு தாமதமாகவே அழைத்து வந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது என்றார்.

இரண்டு நாட்களுக்கு முன்னரே குழந்தை உடல்நலக்குறைவாக இருந்து வந்துள்ளது. ஆனால் ஒரு மருத்துவரிடம் கூட குழந்தையை காட்டவில்லை. விசாரித்த போது, குழந்தையின் குடும்பத்தினர் ஆம்புலன்ஸ்க்கு போன் கூட செய்யவில்லை என்றும், அன்றைய நாள் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை இயங்கிக்கொண்டிருந்தது எனவும் தெரிய வந்துள்ளது என்றார்.

மேலும் கூறுகையில், குழந்தையின் பெற்றோர் வீட்டிற்கு அருகில் இருக்கும் பால்பிகா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், தூரமாக இருக்கும் சாதர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர்கள் வந்த ஆட்டோ டிரைவர் மற்றும் குழந்தையின் தந்தை இருவரும், வரும் வழியில், நாங்கள் வந்த ஆட்டோ நிறுத்தப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். எனவே பாரத் பந்தை குறை கூறுவதில் நியாயமில்லை என்கிறார் அலோக் ரஞ்சன்.

ஆனால் பா.ஜ.க வின் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தோ, காங்கிரஸ் நடத்திய பந்தினால் தான் ஒரு குழந்தையின் உயிர் போய்விட்டது என்று செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.

இது குறித்த ரவிசங்கர் பிரசாத் பேட்டியில், ஒவ்வொருவருக்கும் போராட உரிமை உள்ளது. ஆனால் இன்றைக்கு என்ன நடந்தது? பெட்ரோல் பங்க் மற்றும் பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளன. மக்களின் உயிருக்கு அச்சம் ஏற்பட்டிருந்தது. பந்த் போராட்டத்தினால் ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் ஒரு குழந்தை இறந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பேற்ப்பது என்று பேட்டியளித்தார்.

பந்த் போராட்டத்தின் காரணமாக இதுவரை 687 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தை இறப்பு விசயத்தில் கௌரியின் பெற்றோர், மாற்றி மாற்றி பேசுவதற்கு பின்னணியில் பா.ஜ.க இருக்குமோ என்று சந்தேகம் எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். ஏனெனில் ஏற்கனவே உ.பி யில் லவ் ஜிகாத் செய்து என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று புகார் கொடு, காசு தருகிறோம் என்று ஒரு பெண்ணை பா.ஜ.க மிரட்டியது என்றும், அது அப்பெண்ணின் வாயாலேயே வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here