நன்மை தரும் பனை மரத்தை பாதுகாப்போம்

0
836
views

தமிழக அரசின் மாநில மரம் தான் பனை மரம். கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய இந்த மரம், மழை காலத்தில் கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் நிலத்தின் அடியில் கொண்டு சேர்க்கும் தன்மை கொண்டது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, 30 கோடி பனை மரங்கள் தமிழகத்தில் இருந்தன. 1980 களில், பனை மரத்தொழிலை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் செய்தனர். ஆனால் தற்போது 5 கோடி மரங்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளது. பல இடங்களில் இவை வெட்டப்பட்டு செங்கல் சூளைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

10 வருடங்களுக்கு முன்பு, கிராமங்களில் தண்ணீரால் நிரம்பி வழிந்த கிணறுகள், தற்போது வறண்டு காணப்படுகின்றன. விவசாயம் செய்வதற்கு போதிய தண்ணீர் இல்லை. நகரப்பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போகிறது. ஆகவே, எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் பனை மரத்தை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம்.

பனைமர விதைகளை கிராமங்களில் உள்ள கண்மாய் கரைகள், சாலையின் இரு புறங்களிலும் மற்றும் நகரப்பகுதிகளிலும் விதைக்க வேண்டும். பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், தொண்டு நிறுவனங்கள் இதில் ஈடுபட வேண்டும். பனை மரம் நகரில் வளர்ந்தால் கேவலம் என்கிற சிந்தனையில் மாற்றம் காண்போம். பனை மரங்களை அதிகம் வளர்ப்போம்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here