கற்பூர சோதனை – ஆழமான தொட்டியை சுத்தம் செய்வதற்கு முன்பு செய்ய வேண்டியது..

0
699
views
Inspite of the high court banning manual scavenging, the contract labourers are still deployed to remove the clogged drains. The picture was taken at Raja Muthiah Rd, Periyamet in Chennai.22-20-2009 pic B A Raju

தண்ணீர் தேங்கியுள்ள கிணறு, தொட்டி ஆகியவற்றின் அடியில் பலவிதமான கழிவுகள் இருக்கும். இந்த கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் சல்பைடு விஷவாயு உருவாகி தொட்டியின் அடிப்பகுதி முழுவதும் பரவி இருக்கும். பிராணவாயுவான ஆக்சிஜன் இங்கு இருக்காது. இது தெரியாமல் தொட்டிக்குள் இறங்கினால், விஷவாயு தாக்கி இறப்பு நேரிடும்.

எனவே இறங்கும் முன்பு தொட்டிக்குள் பிராண வாயு இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதற்கு ஒரு வாளியில் கற்பூரத்தை கொளுத்தி வைத்து, கயிறு கட்டி தொட்டிக்குள் இறக்க வேண்டும். தடையின்றி கற்பூரம் எரிந்தால் தொட்டிக்குள் ஆக்சிஜன் இருக்கிறது என்று அர்த்தம். தைரியமாக உள்ளே இறங்கலாம்.

கற்பூரம் திடிரென அணைந்தால், அங்கு ஆக்சிஜன் இல்லை என்று அர்த்தம். தொட்டிக்குள் இறங்கக்கூடாது. தொட்டிக்குள் தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தால், விஷவாயுவின் வீரியம் குறையும். அதன் பிறகு மீண்டும் கற்பூர சோதனை செய்துவிட்டு, ;விஷவாயு இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு உள்ளே இறங்குவது தான் பாதுகாப்பானது.

நாம் செல்லும் வழியில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்பவர்களை பார்த்தால், படித்த நாம் அவர்களுக்கு கற்பூர சோதனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இது போன்ற விபத்துகளை தடுத்திடுவோம்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here