ஏழை டெய்லர் மனைவியின் மனிதநேயம் ! அப்படி என்ன செய்துவிட்டார் மதுரை காந்திமதி?

0
2778
views

துரை கீழ மாசி வீதியில், தினமும் மதியம் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கி வருகிறார் “மதுரை காந்திமதி” அம்மையார். 66 வயதாகும் காந்திமதி, ஒரு சாதாரண டெய்லரின் மனைவி. தினமும் வேலைக்கு சென்றால் தான் சாப்பிட முடியும் என்கிற சூழ்நிலை. ஆனாலும் தினமும் மதியம் வீட்டில் உணவு சமைத்து எடுத்து வந்து அதை ஏழைகளுக்கு பரிமாறி மகிழ்கிறார்.

“எனது உணவை வயிறாற சாப்பிட்டு மகிழ்ச்சியோடு ஒருவர் சென்றாலே, எனக்கு அன்றைய தினம் நிறைவு பெறும்”   

என்கிறார். இவரின் இந்த சமூக சேவையை பார்த்த அப்பகுதி வியாபாரிகள் காய்கறிகளையும், அரிசி மற்றும் எண்ணெய்களையும் தந்து உதவுகிறார்கள். தினமும் அவரை இங்கு கொண்டு வந்து சேர்க்கும் ஆட்டோ டிரைவர் அவரிடம் பணம் வாங்குவதில்லை. ஏழைகளுக்கு உணவளிப்பதில் தன்னுடைய பங்களிப்பாக இருக்கட்டும் என பெருந்தன்மையோடு அவரும் உதவி செய்கிறார்.

காந்திமதிக்கு யாரையும் தெரியாது. ஆனால் பசித்தவருக்கு உணவளிக்க வேண்டும் என்ற பண்பால், பலரது உதவிகள் அவருக்கு குவிகிறது.

நண்பர்களே, 2018 புத்தாண்டு என்கிற பெயரில் வெடிவெடித்தும், பார் கிளப்புகளில் பார்ட்டிகளை ஏற்பாடு செய்து, ஆபாச நடனம் ஆடுவதையும் விட்டுவிட்டு, மதுரை காந்திமதி அம்மையாரை போன்று ஏழைகளுக்கு உணவு அளித்து புத்தாண்டு உள்ளிட்ட சந்தோச நிகழ்ச்சிகளை சிறப்பிக்கலாமே. வீணான முறையில் பணம் செலவு செய்து எந்தவொரு நிகழ்ச்சியையும் கொண்டாடுவதற்கு பதிலாக, இதுபோன்று சமூக தொண்டுகள் மூலம் உங்கள் பணத்தை செலவு செய்யுங்கள். இனிவரும் புத்தாண்டுகள் உள்ளிட்ட விசேச நிகழ்ச்சிகளுக்கு, நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி, ஏழைகளுக்கும், அநாதை குழந்தைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் உணவு அளித்து பசியில்லா சமுதாயத்தை கட்டமைப்போம்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here