தேவையானவை:
கம்பு இட்லி தலா – 200 கிராம்
உளுந்து – 75 கிராம்
பொடியாக நறுக்கிய கேரட்
கொத்தமல்லி தழை
குடமிளகாய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
கம்புடன் இட்லி அரிசியை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதே போல், உளுந்தம் பருப்பையும் தனியாக ஊற வைக்க வேண்டும். முதலில் உளுந்தை, வெண்ணெய் போல (கிரைன்டரில்) ஒன்றாக அரைக்க வேண்டும். ஊற வைத்த கம்பு, அரிசியையும் அரைத்து, உளுந்து மாவுடன் சேர்த்து உப்பு கலந்து கரைத்து வைத்து கொள்ளவும்.
மறுநாள் காலையில், இட்லி பாத்திரத்தில் துணியை வைத்து, நறுக்கிய கேரட், கொத்தமல்லி தழை, குடமிளகாய் ஆகியவற்றை வைத்து, அதன் மேல் இட்லி மாவை ஊற்றி வேகவைத்தால், கம்பு இட்லி தயார். கம்பு இட்லி மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு உகந்தது.ஆரோக்கியமான உணவை உண்டு நோயில்லா சமூகத்தை கட்டமைப்போம்.

Young ambitious writer