அனைவரும் ஒரு தாய் மக்கள் – ஆய்வில் வெளியான தகவல் !

0
596
views

உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள் இருந்து வருகிறது. ஆனால் நாம் அனைவருமே ஒரு தாய் மக்கள் என்பது வெளியாகிவுள்ளது.

மனித செல்லில் உள்ள மைட்ரோகாண்ட்ரியாவில் 1,61,569 டி.என்.ஏ துணுக்குகள் (DNA fragments) உள்ளன. இந்த துணுக்குகளில் ஏதேனும் ஒரு துணுக்கு 1500 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுதல் அடையும். ஒரு துணுக்கு மாறுபட்டு இருந்தாலும், அவர்கள் 1500 ஆண்டுகுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு பெண்ணின் மரபு வழி வந்த வாரிசுகள் தான்.

இதுவரை 134 டி.என்.ஏ துணுக்குகள் வேறுபட்டுள்ளன. இந்த வேறுபட்ட தரப்பினருக்கு பொதுவானத் தாய் (Common Mother) இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு (1500×134=2,01,000) முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும். மைட்ரோகாண்ட்ரியா எனது தாயிடம் இருந்தே குழந்தைக்கு வருகிறது. எனவே நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் தான்.

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பண்டிகைகள்:

நமது நாட்டில் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் என பல மதங்கள் இருந்தாலும், பண்டிகை நாட்களில் மதங்களை கடந்து மக்களிடையே அன்பு பரிமாறப்படுகிறது.

இந்துக்கள்: பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் செய்து சாதி, மதம் பாராமல் அண்டை வீட்டாருக்கு கொடுப்பார்கள். அதே ஒன்று தீபாவளி வரும் போது, சுவையான இனிப்பு பலகாரங்கள் செய்து, அனைவருக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.

முஸ்லிம்கள்: ரம்ஜான் மற்றும் பக்ரித் பண்டிகையின் போது, சாதி, மதம் பாராமல் நோன்பு கஞ்சியையும், இறைசிகளையும், பிரியாணி உணவையும் அண்டை வீட்டாருக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

கிறிஸ்துவர்கள்: கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இனிப்புகளை சாதி, மதம் பாரமால், அண்டை வீட்டாருக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

இது போன்ற பண்டிகைகள் தான் தொடர்ந்து நமது நாட்டில் சாதி, மத குரோத மனப்பான்மையை ஒழித்து, அனைவரையும் ஒரு தாய் மக்களாய் வாழவைக்கிறது. வரும் காலங்களில், பண்டிகை நாட்களின் போது நாம் கடைபிடிக்கும் நல்லிணக்கத்தை எல்லா நாட்களிலும் செயல்படுத்த முயற்சிப்போம். மத வேற்றுமைகளை மறந்து, பார்க்கும் போதெல்லாம் அன்பு மற்றும் சிரிப்பு இரண்டையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஒரு தாய் மக்களை வாழ்வோம்.

Young ambitious writer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here